Categories: latest newstelevision

Siragadikka Aasai: மனோஜை குழப்பும் ரோகிணி… முத்துவால் மனம் உருகும் விஜயா… சரி இல்லையே?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

ரோகிணி பார்ட்டிக்கு போவதாக கிளம்ப எங்கே செல்கிறாய் எனக் கேட்கிறார் மனோஜ். அது உனக்கு எதுக்கு எனக் கேட்க அம்மா கேட்டா சொல்லணுமே என்கிறார்.

ரொம்ப அம்மா பையனா இருக்க மனோஜ் எனக் கூறி நான் போறதை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் எனச் சொல்லி ரோகிணி சென்று விடுகிறார். பிறந்தநாள் பார்ட்டிதானே எப்படி கேக் வாங்குவாள் எனக் கூறி ரோகிணியை பாலோ செய்கிறார்.

ஒரு கடையில் கேக் வாங்கிக்கொண்டு ரோகிணி செல்ல அவரை பின்பற்றி வந்த மனோஜ் அவர் சென்றதும் கடைக்கு வந்து பேசுகிறார். மறைமுகமாக பேசி ரோகிணி கேக்கில் போட்ட பெயர் மகேஷ் என்பதை தெரிந்து கொள்ள அதிர்ச்சி அடைகிறார்.

வீட்டிற்கு முத்து குடித்து விட்டு வர அதை பார்த்து விஜயா கடுப்பாகி மறுபடியும் ஆரம்பிச்சிட்டானா என்கிறார். ஆனால் முத்து தன்னுடைய அம்மா குறித்து குடித்துவிட்டு புலம்ப அதை கேட்டு விஜயா அதிர்ச்சியாகி விடுகிறார். இருந்தும் தன்னுடைய கெத்து குறையாமல் பேசுகிறார்.

முத்து தொடர்ந்து அம்மாக்காக பேசிக்கொண்டே அவரை துரத்த ஒரு கட்டத்தில் விஜயாவின் மடியில் படுத்து கொள்கிறார். ஆனால் ஒன்னும் சொல்ல முடியாமல் விஜயாவும் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் எழுந்து செல்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை வர முத்து குடித்தது தெரிந்து விடுகிறது.

அவரிடமும் புலம்பிக்கொண்டு இருக்கிறார் முத்து. பின்னர் காலையில் அண்ணாமலையிடம் முத்து திடீரென குடித்த விஷயம் குறித்து மீனா சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

25 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago