Categories: latest newstelevision

Siragadikka Aasai: மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா… அடித்து கொள்ளும் அருண்-முத்து…

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

சீதா மற்றும் அருண் காதல் குறித்து மீனா அண்ணாமலையிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். சீதா படிச்ச பொண்ணு. அவ ஒருத்தனை தேர்வு செஞ்சா அது சரியா தானே இருக்கும். நான் அவனிடம் பேசுகிறேன் என்கிறார் அண்ணாமலை.

ஆனால் மீனா வேண்டாம் மாமா. நான் உங்களிடம் சொல்லி பேச சொன்னதா நினைப்பாங்க என்கிறார். அந்த நேரத்தில் விஜயா வர என்ன ஆச்சு என்னமோ கோடி போட்டு தாண்டுவியா என்கிறான். என்ன பிரச்னை எனக் கேட்க அதெல்லாம் எதுவும் இல்லை என மீனா சமாளிக்கிறார்.

தொடர்ந்து எதுக்கு கோடி போட்டு தாண்ட சொன்னான் என விஜயா கேட்க அந்த நேரத்தில் முத்துவும் வந்து என்ன செஞ்சேன் எனக் கேட்கிறார். விஜயா பேசப்போக அந்த நேரத்தில் வாயில் கட்டுடன் வருகிறார் மனோஜ். அருகில் ரோகிணி நிற்கிறார்.

மனோஜ் கீழே விழுந்துட்டாரு. காலையில் வீங்கி இருந்ததால் டாக்டரிடம் கூட்டிக்கிட்டு போனேன் என்கிறார். அது என்ன கட்டில் சின்ன ஓட்டை எனக் கேட்க ஜூஸ் குடிக்க என்கிறார் ரோகிணி. விஜயா எதுக்கு என்ன கூப்பிடாம டாக்டர பாக்க போனீங்க என்கிறார்.

மனோஜ் என்னவோ ஆக்‌ஷன் செய்ய வலியில் உங்களையா எழுப்ப வேண்டும் என மாற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார் ரோகிணி. அண்ணாமலை என்ன ஆச்சு எனக் கேட்க அவனுக்கு வாயில் கொழுப்பு என்கிறார் முத்து. மறுபக்கம் சீதா தூங்கி கொண்டு இருக்க இந்திரா வருகிறார்.

சீதாவை சாப்பிட எழுப்ப உடல் கொதிக்க அய்யோ என்ன ஆச்சு என அவரை எழுப்ப அவர் மயக்கத்தில் இருக்கிறார். சத்யாவும் வர அவரை வைத்து சீதாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கின்றனர். முத்துவை அழைக்கும் மீனா அவருக்கு எப்படி அடிப்பட்டு என்கிறார்.

நீங்க தானே பேசிட்டு இருந்தீங்க. என்னமோ நடந்து இருக்கு என்கிறார். ஆமா நடந்துச்சு என முத்து சொல்ல அந்த நேரத்தில் இந்திரா கால் செய்கிறார். சீதா மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட விஷயம் குறித்து சொல்ல மீனா, முத்து அங்கு கிளம்புகின்றனர்.

மருத்துவமனையில் இருக்கும் போது அங்கு அருண் அம்மா இதை பார்க்க டாக்டரிடம் சீதா குறித்து விசாரிக்கிறார். பின்னர் அருணுக்கு கால் செய்து விஷயத்தை சொல்லி விடுகிறார். முத்து மற்றும் மீனா வந்து சீதாவை பார்க்க என்ன ஆச்சு என்கிறார்.

இந்திரா விஷயத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறார். அப்போ அருணும் வர முத்து அவரிடம் சண்டைக்கு நிற்கிறார். உனக்கு இங்க வர என்ன உரிமை எனக் கேட்க என் வீட்டு பொண்ணு என்கிறார். உனக்கு சீதா நல்லா இருக்கது பிடிக்கலை என்கிறார் அருண். இருவரும் சண்டை போட்டுக்கொள்கின்றனர்.

இந்திரா உள்ளே வந்து நான் அப்போவே சொல்லிட்டேன். என் மருமகன் சம்மதம் சொன்னால் தான் இந்த கல்யாணம் நடக்கும் என்கிறார். அருண் சென்று விடுகிறார். டாக்டர் அழைத்து சீதாவுக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை. அமனசில் தான் எதையோ நினைச்சு குழப்பிட்டு இருக்கா என்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

11 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago