செம பல்ப் வாங்கிய விஜயா… சிக்குவாரா ரோகிணி… சீதாவிடம் புரபோஸ் செய்த அருண்!

by ராம் சுதன் |
செம பல்ப் வாங்கிய விஜயா… சிக்குவாரா ரோகிணி… சீதாவிடம் புரபோஸ் செய்த அருண்!
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.

விஜயா மற்றும் மனோஜ் வயிறு வலியால் துடித்து கொண்டு இருக்கின்றனர். அப்போ வரும் அண்ணாமலையிடம் சும்மா பேசிக்கொண்டு இருந்தோம் என விஜயா சமாளிக்க மனோஜ் வயிறு வலிப்பதாக உண்மையை சொல்லி விடுகிறார்.

அண்ணாமலை அதற்கு விஜயாவை திட்டிக்கொண்டு இருக்க அப்போ மீனா, முத்துவை எழுப்புகிறார். என்னாச்சு என முத்து வர வயிற்றில் சத்தம் கேட்பதாக மனோஜ் சொல்ல உங்களுக்கும் அதான் கேட்குதா என முத்து விஜயாவை கலாய்க்கிறார்.

சத்தம் கேட்டு எல்லாரும் எழுந்து வர ஸ்ருதி இதான் வழக்கமான விஷயத்தை செய்யாம புதுசா செஞ்சா ஒத்துக்காம போகும் என்கிறார். உடனே மீனா அவர் அம்மாவிடம் கேட்டு உப்பு, சீனி கலந்த தண்ணி கொடுக்கிறார். இதுக்கெல்லாம் காரணம் மீனா தான் என்கிறார் விஜயா.

அவ தான் எதுவும் கலந்து இருப்பா எனக் கூற கடுப்பாகி விடுகின்றனர். மனோஜ் மற்றும் விஜயா இனி டயட் வேண்டாம் என முடிவெடுத்து படுக்க செல்கின்றனர். அடுத்த நாள் மீனா தன்னுடைய தம்பி மற்றும் தங்கையிடம் வீட்டில் நடந்த விஷயங்களை கூறி சிரிக்கிறார்.

அப்போ மீனாவுக்கு கால் வர அவர் சென்றுவிடுகிறார். சத்யாவும் சென்று விட அப்போ சீதா மற்றும் மீனா அம்மா மட்டுமே இருக்கின்றனர். அந்த நேரம் கான்ஸ்டபிள் அருண் அவர் அம்மாவுடன் கோவிலுக்கு வருகிறார். வந்து சீதாவின் அம்மாவுக்கு நன்றி சொல்கிறார்.

சீதா அவர்களை கோவிலுக்குள் அழைத்து சென்று அர்ச்சனை செய்ய வைக்கிறார். சாமி கும்பிட்ட பின்னர் சீதாவுடன் அருண் தனியா இருக்கும் போது ஒளிச்சு மறைச்சு பேச தெரியலை. எனக்கு உங்களை பிடிச்சு இருக்கு என்கிறார். சீதா என்ன திடீரென சொல்றீங்க எனக் கேட்கிறார்.

சீதா, தனக்கு இப்போ கல்யாணத்தில் எல்லாம் ஆசை இல்ல. வேலைக்கு போணும். தம்பி படிக்கிறான். வீட்டை பாத்துக்கணும் என்கிறார். நான் இன்னும் அம்மாவிடமே சொல்லலை. நீங்க உங்க முடிவை சொன்னதும் தான் அம்மாவிடம் சொல்லணும் என்கிறார். டைம் வேணும் என சீதா கேட்க யோசித்து சொல்லுங்க என்கிறார்.

ரோகிணி ஷோரூமில் இருக்கும் போது கறிக்கடைக்காரர் வர அவரை பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். என்ன விஷயம் எனக் கேட்க இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

Next Story