Vijay Tv: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தன்னுடைய நம்பர் ஒன் இடத்தினை தவறவிட்டு இருக்கிறது. இதற்கு காரணம் கதையின் போக்கு தான் எனவும் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் பொதுவாக எல்லா சீரியல்களும் இடத்தினை பிடிக்காது. அதன் கதை நன்றாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து எபிசோட்கள் ஒளிபரப்பப்படும். அது தவறும் பட்சத்தில் சீரியலை உடனே நிறுத்தி தூக்கி போட்டு விடுவார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியின் நிறைய சீரியல்களுக்கு மூடு விழா நடந்து இருக்கிறது. தற்போது சிறகடிக்க ஆசை கூட அந்த இடத்துக்கு சென்று விடுமோ என்ற நிலையில் ரசிகர்கள் இருப்பதுதான் விஷயமாகி இருக்கிறது.
மூன்று மகன்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது சிறகடிக்க ஆசை. இதில், முதல் மகன் ஒரே பொய்யாக பேசி காசை திருடி இன்னொரு பெண்ணை கட்டிக்கொள்கிறார். அவரோ இவரை விட கேடியாக பெரிய பெரிய பொய்யை சொல்லி அந்த ரூட் ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்கிறது.
இரண்டாவது மகனான முத்து தான் ஹீரோ. இவரின் சின்ன வயதில் நடந்த ஒரு விஷயத்தால் சொந்த அம்மாவே அவரை வெறுக்க அது என்ன என்ற விஷயம் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.
இதனாலே பல மாதங்களாக விஜய் டிவியின் நம்பர் 1 இடத்தினை பிடித்து இருக்கிறது சிறகடிக்க ஆசை. ஆனால் தற்போது வேறு ரூட்டில் சீதா கல்யாணம், மனோஜ் சந்தேகம் என தேவையில்லாத ரூட் பிடிக்க ரசிகர்களுக்கு வெறுப்பை தட்டி இருக்கிறது.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ்2 விஜய் டிவியின் முதல் சீரியல் என்ற அங்கீகாரத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த வார புரோமோவில் சீதாவின் காதலுக்கு முத்து நோ சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருக்க மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர்.
அதே மருத்துவமனையில் பிடித்தவனை கட்டிக்கொள்ள விடாத காரணத்தால் தற்கொலை செய்துக்கொள்கிறார். முத்துவின் காரில் அட்மிட் செய்ய அந்த பெண் பிழைத்து விடுகிறார். அவரின் அம்மா முத்துவிடம் தன் கணவருக்கு அறிவுரை சொல்ல சொல்கிறார்.
இதில் முத்து அமைதியாக இருக்கிறார். மீனா முத்துவிடம் நீங்க அட்வைஸ் பண்ணுங்க. அதான் சரியாக இருக்கும் என கோபமாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
