Categories: latest newstelevision

Siragadikka Aasai: சீதாவுக்காக போராடும் மீனா… முரண்டு பிடிக்கும் முத்து… என்ன நடக்க போகுதோ?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

முத்து மற்றும் செல்வம் இருவரும் பேசிக்கொண்டு இருக்க அங்கே வருகிறார் மீனா. அந்த சமயத்தில் சத்யாவும் வர வீட்டில் சீதா சொன்ன விஷயத்தினை சொல்கிறார். இதை கேட்கும் முத்து பரவாயில்லை நல்ல பொண்ணு புரிஞ்சிக்கிட்டா என்கிறார்.

இருந்தாலும் அவ அழுதுக்கிட்டே இருக்கா மாமா எனக் கூற கெட்டவனை காதலிச்சி இருக்கலாமே என நினைச்சிருக்கலாம் என்கிறார். இப்படி எல்லாத்தையுமே உங்க இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருக்காதீங்க என மீனா கடுப்படிக்கிறார்.

சத்யாவிடம் நீயும் ஆம்பள தான? பசங்களோட பழகி இருப்பீயே. ஒரு பொண்ணை கரெக்ட் செய்ய என்னெல்லாம் செய்வாங்க என்கிறார். சத்யா சீதா அப்படி தப்பான பையனை தேர்வு செய்ய மாட்டா மாமா எனக் கூற, அவரு சரி கிடையாது என்கிறார் முத்து.

அந்த தாத்தை தள்ளிவிட்டு என் லைசன்ஸை கேன்சல் செய்து என எவ்வளோ பிரச்னை பண்ணி இருக்கான் எனக் கூற நீங்களும் அவருக்கு நிறைய இம்ச கொடுத்துதானே இருக்கீங்க என மீனாவும் வம்புக்கு நிற்கிறார். இதில் கடுப்பாக்கும் முத்து சீதாக்கு அந்த பையன் வேண்டாம் என உறுதியாக கூறுகிறார்.

உடனே, சீதாக்கு அவ போற வீட்டுல மரியாதையோட இருக்கணும். யாரு சரியில்லை என்றாலும் கூட வாழ போறவன் சரியா இருக்கணும் என்கிறார். சீதாக்கு தங்கமான மாப்பிள்ளையை நான் கூட்டிட்டு வரேன் எனக் கூறி செல்கிறார்.

சத்யா பேசி பார்த்தும் சரியில்லாமல் போக மீனாவிடம் என்னக்கா செய்யலாம் என்கிறார். அவருக்கு அந்த போலீஸ் சரியில்லை என மனசில் தோன்றுவிட்டது. அவரும் சீதாக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க நினைக்கிறாரு. ஆனா, பிடிச்ச வாழ்க்கையை கொடுக்கணும்னு யோசிக்க மாட்டிங்கிறாரு என்கிறார்.

ரவி வீட்டிற்கு வர ஸ்ருதி ஹோட்டலை தொடங்கும் விஷயம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். இப்போது ரெஸ்டாரெண்ட் வேண்டாம் என ரவிக்கூற ஸ்ருதி நான் தானே ரிஸ்க் எடுக்கிறேன். நீ சொல்லு எனக் கூற ரவி கோபத்தில் ரெஸ்டாரெண்ட் பற்றி சில டேட்டாக்களை தர ஸ்ருதி பாரு உனக்கு இவ்வளோ தெரிது என்கிறார்.

ரவி சாப்பிட செல்ல அங்கு முத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். மீனா, சீதாக்காக சப்போர்ட்டாக பேச பார்க்கிறார். ஆனால் முத்து அந்த கான்ஸ்டபிள் வேண்டாம் என பிடிவாதமாக சொல்லி விடுகிறார். அப்போ வரும் ரவி, ரெஸ்டாரெண்ட் விஷயமாக ஸ்ருதி அடம் பிடிப்பது குறித்து சொல்கிறார்.

ஒரு கட்டத்தில் முத்து நான் உனக்காக பேசுகிறேன். இந்த விஷயத்தில் உனக்காக நான் பேசுகிறேன் என்கிறார் முத்து. ஆனால் மீனா ஸ்ருதி செய்றது சரிதானே எனக் கூறுகிறார். ரவி சென்றுவிட மீனா, உங்க தம்பிக்கு பிடிக்காததை செய்ய கூடாதுனு நீங்க நினைக்கிறீங்களே.

அதுபோல சீதாக்கு பிடிச்சதை ஏன் மறுக்கிறீங்க எனக் கேள்வி எழுப்புகிறார். ரவி ஹோட்டல் ஆரம்பிக்கிறது ஒரு பகுதி தான். அது வாழ்க்கை இல்லை என்கிறார் முத்து. இதுல பிரச்னை வந்தா வெளியில் வந்துடலாம். ஆனா சீதா நிலைமை அது இல்ல என்கிறார்.

ரூமில் ரோகிணி மீண்டும் கால் செய்து மகேஷ் எனச் சொல்லி பேசிக்கொண்டு இருக்கிறார். இதை அப்போ வரும் மனோஜும் ஒட்டுக்கேட்க ரோகிணி சிரித்துக்கொண்டு இருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

55 minutes ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

1 hour ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

2 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

9 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

12 hours ago