Categories: latest newstelevision

TRP Serial: சன் டிவிக்கு சரிசமமாக மாஸ் காட்டும் விஜய் டிவி… இந்த வாரத்தில் இத்தனை மாற்றமா?

TRP Serial: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த வாரம் டாப் 10 லிஸ்ட்டில் இருக்கும் தொடர்களில் சன் டிவி மற்றும் விஜய் டிவி மட்டுமே சம போட்டியை கொண்டு இருக்கிறது.

டிஆர்பி என்பது ஒரு வாரத்தில் சின்னத்திரை சீரியல்களில் அதிகம் பார்க்கப்பட்ட லிஸ்ட் அவ்வப்போது மாற்றம் இருக்கும். ஆனாலும் கடந்த சில மாதங்களாகவே சன் டிவி தொடர் மட்டுமே டாப் 5 இடத்துக்குள் இடம்பெற்றுள்ளது.

முதலிடத்தில் கடந்த வாரம் சிங்கப்பெண்ணே தொடர் இடம்பெற்று இருக்க தற்போது அந்த இடத்தினை மூன்று முடிச்சு அசால்ட்டாக தட்டி இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலே இருக்கிறது.

மூன்றாவது இடத்தில் சன் டிவியின் பல வருட சீரியலான கயல் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரே கதையை வைத்து உருட்டிக்கொண்டே இருந்தாலும் இன்னும் கயல் சீரியல் முதல் சில இடங்களிலே தக்க வைத்து கொண்டு இருக்கிறது.

நான்காவது இடத்தில் சன் டிவியின் முக்கிய சீரியலான மருமகள் இருக்கிறது. இதில் ஹீரோ, ஹீரோயினின் சூப்பரான நடிப்பு பலரையும் கவர்ந்துள்ள நிலையில் டாப் 5க்குள் இந்த சீரியல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இருக்கிறது. தொடர்ந்து பரபரப்பான கதைகள் இல்லாத காரணத்தால் இந்த சீரியலால் டாப் 3 இடத்திற்கு கூட வராமல் இன்னும் பாதிக்குள்ளே தத்தளித்து கொண்டு இருக்கிறது.

ஆறாவது இடத்தில் சன் டிவியின் அன்னம் சீரியல் இருக்க திருமண எபிசோடிற்கு பின்னர் இந்த சீரியலின் டிஆர்பி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஏழாவது இடத்தில் சன் டிவியின் அய்யனார் துணை சீரியல் முன்னேறி இருக்கிறது.

புதிய கதை என்பதால் பிரபலங்களின் தேர்வு ரசிகர்களை கவர்ந்து விட்டதால் இந்த சீரியலின் டிஆர்பி இன்னும் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எட்டாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியல் இருக்கிறது.

அரசியின் கல்யாண எபிசோட் தொடர்ந்து ஆர்வத்தினை ஏற்படுத்தி வருவதால் இன்னும் டிஆர்பியில் முன்னேற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒன்பதாவது இடத்தில் மகாநதி சீரியல் இருக்கிறது. விஜய் மற்றும் காவேரி இருவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

இருந்தும் இந்த சீரியலின் டிஆர்பி முதல்முறையாக டாப் 10க்குள் வந்துள்ளது. விஜயின் கைது பிரச்னைக்கு காவேரியின் துணிச்சலான நடவடிக்கைக்கு சீரியலின் டிஆர்பி எகிறி வருகிறது. பத்தாவது இடத்தில் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் சரிவை சந்தித்து இருக்கிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

1 hour ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

1 hour ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

8 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

11 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

12 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

1 day ago