Connect with us

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களுக்கு சம்பளம் என்ன தெரியுமா? கோபிக்கு இவ்வளவு தானா?

television

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களுக்கு சம்பளம் என்ன தெரியுமா? கோபிக்கு இவ்வளவு தானா?

Bakkiyalakshmi: விஜய் டிவியில் பல வருடமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. குடும்பப் பெண்ணாக இருந்து தொழிலதிபராக மாறும் ஒரு பெண்ணை பற்றிய கதை என்பதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

முக்கியமாக இந்த சீரியலின் வில்லன் ரோலில் நடிக்கும் கோபிக்காகவே சீரியல் பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த சீரியலில் சுசித்ரா, சதீஷ், திவ்யா கணேஷ், ரேஷ்மா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த வருகின்றனர். ஸ்டார் ஜல்சா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்ரீமோயி தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் பாக்கியலட்சுமி.

முதலில் பாக்கியாவாக நடிக்க இருந்தது நடிகை கஸ்தூரி தான். ஆனால் அந்த நேரத்தில் பிக் பாஸ் தமிழ் சீசனில் வைல்ட்கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற கஸ்தூரிக்கும், விஜய் தொலைக்காட்சிக்கும் மனஸ்தாவும் ஏற்பட்டதால் அவர் இந்த ரோலில் நடிக்க முடியாது என மறுத்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து நடிகை பிரியா ராமனை கதாபாத்திரத்தில் நடிக்க சீரியல் குழு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்தே கன்னடா நடிகையான சுசித்ராவை பாக்கியலட்சுமி ஆக தமிழுக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து வந்த நடிகை ஜெனிபர் வெளியேறிய நிலையில் ரேஷ்மா பசுபலட்டி அந்த கேரக்டரில் நடித்து வருகிறார். செழியனாக நடித்த விஷாலும், அமிர்தா கேரக்டரி்ல் நடித்த ரித்திகாவும் வெளியேறி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்களுக்கான ஒருநாள் சம்பளம் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ராவுக்கு ரூபாய் 15,000 சம்பளமாக வழங்கப்படுகிறது. கோபியாக நடிக்கும் சதீஷ் மற்றும் ரேஷ்மாவிற்கு ரூபாய் 12000ம் வழங்கப்படு்வதாக தகவல்கள் தெரிவிக்கிறது. விஷால் மற்றும் திவ்யா கணேஷுக்கு ௧௦ ஆயிரமும், இனியாவாக நடிக்கும் நேகாவுக்கு எட்டாயிரமும் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top