சீரியல் தொடர்களின் ரேட்டிங் வாராவாரம் வெளியிடப்படும். இந்த ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்க தான் விறுவிறுப்பை கூட்டி ரசிகர்களை கவர தயாரிப்பு நிறுவனம் படாதப்பாடு பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரத்தின் டாப் சீரியல் ரேட்டிங்கின் முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சன் டிவிக்கு தான் ரசிகர்கள் அதிகம். அதனால் அந்த டிவியின் சீரியல்களை முந்த கண்டிப்பாக ரொம்பவே பாடுப்பட வேண்டி இருக்கும். அந்த வகையில் சமீபகாலமாகவே விஜய் டிவி சரியான போட்டியை சன் டிவிக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில் ரேட்டிங்கிலும் முதலிடத்தினை பிடித்து இருக்கிறது.
சீரியல் பட்டியலில் சிறகடிக்க ஆசை முதலிடத்தினை பிடித்து இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே மனோஜ் மற்றும் ரோகிணிக்கு கதை சாதகமாக நகர்ந்ததாகவும், தேவையே இல்லாத கதை களங்களால் ரசிகர்கள் சிறகடிக்க ஆசை சீரியலின் மீது கோபத்தில் இருந்தனர். ஆனால் தற்போது அதை டிவி நிர்வாகம் சரி செய்து இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில், இந்த வாரத்தில் மனோஜை லாக் செய்து மீண்டும் 8.38 புள்ளிகளை பெற்று இருக்கிறது.
கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்தது. அடுத்ததாக, சன் டிவியின் சிங்க பெண்ணே இதே புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. புதுமுகங்கள் நடிக்கும் சீரியல் என்றாலும் கதை களத்தால் இன்னும் இந்த சீரியலுக்கு ரசிகர்களிடம் பெரிய ஆதரவு நிலவி வருகிறது, இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் ஆகியோர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இருக்கிறது. தொய்வான கதைக்களம் என்றாலும் புகழ்பெற்ற நடிகர்கள், பிரைம் டைம் ஆகியவற்றால் கயல் சீரியல் முக்கிய இடத்தினை பெற்று இருக்கிறது. கயல் 8.08 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து, சன் டிவியின் மருமகள் சீரியல் 7.89 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தினையும், வானத்தைப் போல சீரியல் 7.50 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தினையும் பெற்றுள்ளது. 7.12 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி 6வது இடத்திலும், 6.80 புள்ளிகளைப் பெற்று 7வது இடத்தில் மல்லி சீரியலும், 8வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…