ஓவர் திமிரில் பேசும் ரோகிணி… வீட்டிற்கு வந்த கோபி.. கதிருக்காக பேசிய பாண்டியன்!..

by ராம் சுதன் |   ( Updated:2025-03-18 21:24:56  )
ஓவர் திமிரில் பேசும் ரோகிணி… வீட்டிற்கு வந்த கோபி.. கதிருக்காக பேசிய பாண்டியன்!..
X

siragadikka aasai

Vijay Serials: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களில் இன்றைய எபிசோடுகளின் தொகுப்புகள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2

கதிரை போலீஸ் நிலையத்திலிருந்து அழைத்து வந்து விடுகின்றனர். எதிர் வீட்டில் சக்திவேல் மற்றும் வெற்றிவேல் நிற்க கவிதை அவர்களுக்கு முன்னால் நிறுத்தும் பாண்டியன் என் பிள்ளை என்று தப்பும் செய்யவில்லை என கூறுகிறார். ராஜியும் இப்போ பேசுங்க அப்பா. இப்ப பேசுங்க சித்தப்பா என நக்கலாக கேட்கிறார்.

ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து வரும் கதிரை எல்லோரும் ஆறுதல் படுத்துகிறார்கள். பின்னர் பூசணி சுற்றி கோமதி எடுத்து செல்ல அவர் சண்டைக்கு சென்று விடுவாரோ என செந்திலும் பின்னால் செல்கிறார். வீட்டில் இத்தனை பிரச்சனையை நடந்திருப்பதால் கடைக்கு இன்று லீவு விடலாம் என பேசிக் கொண்டிருக்கின்றனர்.

சிறகடிக்க ஆசை

மீனாவை பாலோ செய்யும் ஆளுக்கு நேரில் சென்று பெண் கேட்டு விடு என முத்து அட்வைஸ் கொடுக்கிறார். அதற்கு ஏற்ப தாம்பூலத்துடன் முத்துவின் வீட்டிற்கு செல்லும் அந்த ஆள் மீனாவைப் பெண் கேட்க அந்த நேரத்தில் முத்து வாங்க வந்து விடுகிறார். தான் கொடுத்த ஐடியாவில் தான் அவர் இங்கு வந்திருக்கிறார் என தெரிந்து கொண்டு முத்து ஷாக்காகி நிற்கிறார்.

இதை பார்க்கும் மீனா கடும் கோபத்தில் நிற்கிறார். ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் சிரிக்க மீனாவும் சிரித்துவிடுகிறார். அந்த நேரத்தில் விஜயா அங்கு வந்துவிட நீங்க பேசுகிறது இல்லையே என கேட்க ஸ்ருதி நாங்க சேந்துட்டோம் என்பது போல பேசுகிறார். மனோஜ் மற்றும் ரோகிணி சந்தோஷி சார் கொடுத்த பெரிய தொகை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். மனோஜுக்கு திறமை அதிகம் இருக்கு அவர் இன்னும் பெரிய இடத்துக்கு போவார் என ரோகிணி திமிராக பேசிக் கொண்டிருக்கிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியா சொல்வதைக் கேட்காமல் ஈஸ்வரி மற்றும் இனியா செழியனுடன் கோபியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விடுகின்றனர். உங்களுக்கும் இதுதானே ஆசை என பாக்கியாவை கடிந்துவிட்டு செல்கிறார் பாக்கியா. எழிலை சமாதானம் செய்துவிட்டு வீட்டுக்கு செல்கிறார் பாக்கியா.

உள்ளே வரும் பாக்கியாவை ஈஸ்வரி கோபிக்கு தனியாக பத்திய சமையல் செய்ய சொல்கிறார். இதில் கடுப்பாகும் பாக்கியா இது மட்டும் தானா இன்னும் இருக்கா? நீங்க தானே அவரை கூட்டிட்டு வந்தது எல்லாம் நீங்களே செய்யுங்கள் என்கிறார். செழியன் மனசாட்சியோடு பேசுமா எனக் கூற நீ இல்லாத பத்தி பேசாத என கூறிவிட்டு சொல்கிறார். ராதிகா வீட்டிற்கு வர அவர் அம்மாவிடம் மருத்துவமனையில் நடந்து விஷயங்களை கூறுகிறார்.

ஜெனி மற்றும் செல்வியுடன் பாக்கியா பேசிக் கொண்டிருக்க அங்கு வரும் ராதிகாவின் அம்மா கோபியை அழைத்து வந்த விஷயம் குறித்து சண்டையிட பார்க்க இதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை உங்க மாப்பிள்ளையோட அம்மாவிடம் பேசிக்கொள்ளுங்கள் என சத்தம் போடுகிறார்.

Next Story