வீடு வாங்க போகும் மனோஜ்… ஈஸ்வரியால் கடுப்பில் இருக்கும் பாக்கியா… கதிரை கொண்டாடும் குடும்பம்!..

by ராம் சுதன் |
வீடு வாங்க போகும் மனோஜ்… ஈஸ்வரியால் கடுப்பில் இருக்கும் பாக்கியா… கதிரை கொண்டாடும் குடும்பம்!..
X

Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.

பாக்கியலட்சுமி

ராதிகாவின் அம்மா வீட்டிற்கு வந்து தன் மாப்பிள்ளையை தன்னோடு அனுப்புமாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரி என் பிள்ளை என்னோடு தான் இருப்பான் உங்க வீட்டுக்கு வரமாட்டான் என அவரும் திட்டிக் கொண்டிருக்கிறார். போலீஸிற்கு போவேன் என அவர் மிரட்ட கோபி சம்மதத்துடன் தான் அவன் இங்கு இருக்கான்.

நீ எங்க வேணாலும் என்ன வேணாலும் பண்ணிக்கோ என்கிறார். கோபிக்கு தனியாக சமைக்க பாக்கியாவிடம் கேட்க வரும் ஈஸ்வரி கடைசியில் அவரே தன் பிள்ளைக்காக சமைக்கிறார். பின்னர் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க பாக்கியா செழியன் பிள்ளையை தூக்கிக் கொண்டு வெளியில் சென்று விடுகிறார்.

பின்னர் ராதிகா தன்னுடைய நிலையை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அவருக்கு அவருடைய அம்மா சமாதானம் செய்து கொண்டிருக்கிறார். வீட்டில் கோபி ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியாவுடன் பேசி சிரித்துக்கொண்டிருக்கிறார்.

சிறகடிக்க ஆசை

பிசினஸில் லாபம் வந்திருப்பதாக கூறி ரோகிணிக்கு தங்கச்செயின், விஜயாவிற்கு தங்கவளையல் மற்றும் அண்ணாமலைக்கு புது டிரஸ் உள்ளிட்டவைகளை மனோஜ் வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கிறார். இதை பார்க்கும் விஜயா ஓவர் சந்தோஷத்தில் குதிக்கிறார். கடின உழைப்பு மட்டுமில்லை மனோஜ் மாதிரி ஸ்மார்ட்டா இருக்கணும் என ரோகிணி பேசிக் கொண்டிருக்கிறார்.

பின்னர் வீடு வாங்க இருக்கும் விஷயத்தை கூற எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். பின்னர் மீனா மாடியில் நின்று யோசித்துக் கொண்டிருக்கிறார். என்னவென்று கேட்க அவங்க வீடு வாங்கிட்டா அத்தையும் அவங்க கூட போயிடுவாங்க. ஸ்ருதியை அவங்க அம்மா எப்ப வேணாலும் கூப்பிட்டு போவாங்க. மாமா காலம் வரையும் நம்ம எல்லாம் ஒண்ணா இருக்கணும்ன்றது தான் அவர் ஆசை என்கிறார்.

தன்னுடைய அம்மாவை பார்க்க வீட்டிற்கு வருகிறார். கிரிஷை ஸ்கூலுக்கு கிளம்ப சொல்ல அவர் அம்மாவிடம் வீடு வாங்கும் விஷயத்தை குறித்து கூறுகிறார். அவர் ஏன் இவ்வளவு சீக்கிரமாக இந்த பெரிய முடிவு சின்ன வீட்டிலேயே இருக்கலாம் என அறிவுரை கூறுகிறார். இதனால் ரோகிணி கடுப்பாகிறார்.

அண்ணாமலை வேலைக்கு கிளம்ப மனோஜ் செக்யூரிட்டி வேலையா என நக்கல் செய்கிறார். அண்ணாமலை கணக்கு எழுத செல்வதாகவும் வாரம் ஒரு நாள் போனால் போதும் எனக் கூறுவதால் வீட்டில் உள்ளவர்கள் சம்மதத்துடன் கிளம்ப அவரை அழைத்துக் கொண்டு முத்து பள்ளியில் விட செல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2

கதிர் அடிப்பட்டதை நினைத்து குடும்பமே வருத்தப்பட்டு கொண்டு இருக்கின்றனர். கோமதி மகனின் உடம்பில் இருக்கும் காயத்தை பார்த்து அழுகிறார். இதை தொடர்ந்து எல்லாரும் அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர். தங்கமயில் கதிர் குறித்து டிவியில் பெருமையாக பேசுவதாக செய்தியை காட்டுகிறார்.

Next Story