ஜோதிகா - சோனாக்ஷி சின்ஹா இணையும் சிஸ்டம்… மே 22 முதல் அமேசானில்

 
ஜோதிகா - சோனாக்ஷி சின்ஹா இணையும் சிஸ்டம்… மே 22 முதல் அமேசானில்

ஜோதிகா, சோனாக்‌ஷி சிங்\ஹா இணைந்து நடிக்கும் படம் சிஸ்டம். செல்வாக்கும் அதிகாரமும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சூழலில், உண்மையை நிலைநாட்டப் போராடும் இரு பெண்களின் கதையே இந்த சிஸ்டம் படத்தின் மையகதை. அரசு வழக்கறிஞரான சோனாக்ஷி சின்ஹாவும் , நீதிமன்ற ஸ்டெனோகிராபரான ஜோதிகாவும் , எதிர்பாராத சூழலில் இணைந்து அதிகாரவர்கங்களுக்கு எதிராகப் போராடுவதே சிஸ்டம்.
அஸ்வினி ஐயர் திவாரி இப்படத்தை இயக்கியுள்ளார். சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகாவுடன் அஷுதோஷ் கோவாரிகர்ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியில் உருவாகியுள்ள இத்திரைப்படம், மே 22 முதல் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது.

From Around the web