மனோஜை பிரிய போகிறாரா ரோகிணி?… இதுலையும் பித்தலாட்டமா?

 

சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க போகும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தொகுப்புகள். 

கனகா வீட்டுக்கு செல்லும் மனோஜை தேவிகா ஒரு இடத்துக்கு சென்று வரலாம் என சந்தோஷமாக சொல்கிறார். ஆனால் ரோகிணி விவாகரத்து கொடுக்க இருப்பதால் இப்போது அந்த பிரச்சனை முடிய வேண்டும் என்பது தான் தனக்கு முதல் வேலை என்கிறார். 

தேவிகாவும் சரி அதை முடித்து விட்டு வாங்க என்கிறார். பின்னர் கனகாவுடன் விளையாடிவிட்டு மனோஜ் கிளம்பிவிடுகிறார். மனோஜுக்கு ரோகிணி விவாகரத்து கொடுக்க வர இருப்பதால் புது ட்ரெஸ் போட்டு ஜாலியாக கொண்டாட தயாராகிறார். 

மனோஜும் பட்டு வேட்டியில் இருக்க அவரை முத்து மற்றும் ரவி கடுப்புடன் பார்க்கின்றனர். ரோகிணி வித்யா இருவரும் கிளம்புகின்றனர். வித்யா, அப்போ மனோஜை விட்டு இருந்துடுவீயா எனக் கேட்க அவன் என்னோடு இருந்தா குழந்தையை என்ன செய்வானு தெரியலை என்கிறார். 

இப்போ எனக்கு குழந்தை தான் முக்கியம் என்கிறார். வக்கீல் விவாகரத்து சமரச பேச்சுக்கான பத்திரத்தை படிக்கிறார். அதில் ஜீவனாம்சம் குறித்த தகவலை படிக்க ரோகிணிக்கு எந்த காசும் தரப்போவதில்லை என்கிறார் விஜயா. 

ஆனால் அவங்க வயித்துல குழந்தை இருக்கே என லாயர் கேட்க அந்த குழந்தை மனோஜோடது இல்லை என்கிறார். இதை கேட்டு ரோகிணி அதிர்ச்சியாக மனோஜை பார்க்க அவரும் அமைதியாக இருப்பதை பார்த்து கடுப்பாகிறார். வில்லன் மனோஜ் தான்பா! ரோகிணி நிலைமை பாவம் தான்!

From Around the web