அடுத்து டும் டும் டும்... அர்ச்சனாவை கரம் பிடிக்கும் அருண் பிரசாத்... அதிகாரப்பூர்வ அப்டேட்

by Akhilan |
archana arun prasad
X

Arun Archana: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அருண் பிரசாத் தன்னுடைய திருமணம் குறித்து தற்போது பேசி இருக்கிறார். இதுகுறித்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை அர்ச்சனா மற்றும் அருண் பிரசாத் இருவரும் விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்களில் தனித்தனியாக நடித்து வந்தனர். அப்போதே இருவரும் காதலில் இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்தது. இருந்தும், இருவரும் அதுகுறித்து மறுக்கவும் இல்லை. ஒப்புக்கொள்ளவும் இல்லை.

இந்நிலையில் தான் அர்ச்சனா டிவியில் இருந்து வெளியேறி பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்தார். ஆனால் முதல் சில நாட்கள் அழுக மட்டும் தான் செய்தார். இருந்தும் உடனே ஆட்டத்தை கண்டுபிடித்தார். தனியாக ஆட துவங்கினார்.

சரியாக பாயிண்ட் பிடித்து விளையாட அந்த சீசனின் டைட்டில் வின்னராக மகுடம் சூடினார். இதை தொடர்ந்து அவருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த அருண் பிரசாத் இந்த சீசனில் உள்ளே வந்தார். ஆனால் கடந்த சீசன் அவருக்கு வந்த வாய்ப்பை தான் அர்ச்சனாவுக்கு கொடுத்தாராம். எப்படி விளையாட வேண்டும் எனவும் சொல்லிக்கொடுத்தார்.

இருந்தும், அருணால் நிகழ்ச்சியில் பெரிய அளவில் கன்டெண்ட் கொடுக்க முடியவில்லை. பல நாட்கள் கூட்டத்தோடு ஒருவராகவே உலாவி வந்தார். கடைசியில் இறுதி வாரத்தினை தொட முடியாமல் எலிமினேட் ஆகி வெளியேறினார். அதற்கு முன்னர் குடும்ப நண்பர்கள் சுற்றில் அவர் காதலியாக கிசுகிசுக்கப்பட்ட அர்ச்சனா உள்ளே வந்தார்.

சவுந்தர்யா மற்றும் விஷ்ணு போல அவர்கள் நேரடியாக காதலை தெரிவித்து கொள்ளவில்லை என்றாலும் இருவரும் பேசிக்கொண்ட விதத்திலேயே தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தி விட்டனர். அதை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அருணுடன் இருந்த புகைப்படங்களையும் அர்ச்சனா வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் பேட்டியில் கலந்துக்கொண்ட அருணிடம், எப்போ கல்யாணம் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர். வீட்டில் இரு குடும்பமும் பேசி வருகின்றனர். இந்த வருட இறுதிக்குள் திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் விரைவில் இவர்கள் திருமண அறிவிப்பை எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.

Next Story