மீண்டும் மருமகளாக வீட்டுக்கு வந்த நிலா… அடுத்த ஜோடி யாருப்பா!!
Ayyanar thunai: விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொடராக இருக்கும் அய்யனார் துணை சீரியலில் பல எபிசோட்களாக இருந்த எதிர்பார்ப்புக்கு ஒரு முடிவு வந்து இருக்கிறது.
நிலா தன்னை சோழனுக்கே கட்டி வைக்க சொல்லி கேட்டதால் அவர் பெற்றோரும் கல்யாணத்தை சிம்பிளாக கோயிலில் வைத்து முடித்து விடுகின்றனர். நிலாவை வீட்டிலும் விட்டுவிட்டு கிளம்பி செல்கின்றனர். பின்னர் பாண்டியன் மற்றும் சேரன் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
அப்போ சோழன் வந்து என்ன பேசிட்டு இருக்கீங்க எனக் கேட்க ஃபர்ஸ்ட் நைட் பத்தி பேசிக்கொண்டு இருப்பதாக சொல்கின்றனர். அவர் உடனே குஷியாகி ஓகே ஓகே எனக் கூற ஏற்கனவே இப்படி நடந்து நிலாகிட்ட திட்டு வாங்கி இருக்கோம் என இருவரும் தயங்குகின்றனர்.
நிலாக்கு பிடிக்குமானு நான் கேட்க முடியுமா? நீங்க ரெடி பண்ணுங்க! நானும் நிலாவும் வெளியில் சென்று வருவதாக சொல்கிறார். ஆனால் நிலாவை அழைத்தால் அவர் தான் வரவில்லை எனக் கூறிவிடுகிறார். சோழனுக்கு புஸ்ஸுனு போக சேரன் சொல்லி ஒருவழியாக இருவரையும் வெளியில் அனுப்பிவிடுகின்றனர்.
பின்னர் பாண்டி ஷெட்டில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். அங்கு வரும் வானதி நிலா சோழன் கல்யாணம் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். அவங்க திரும்பி வருவாங்க என நான் நினைக்கலை எனக் கூற அவங்களே தான் விருப்பப்பட்டதாக பாண்டி கூறுகிறார்.
அந்த நிலாவை கேட்டாலே வாங்கி கொடுத்துடுவீங்க என எரிச்சலாக சொல்கிறார். நீ ஏன் அவங்களை எதுவும் சொல்லிட்டே இருக்க எனக் கடுப்படிக்கிறார். அப்போதும் வானதி நிலாவை திட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த ஜோடிக்கு தான் அடுத்த கல்யாணமாக கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
