Ayyanar thunai: சேரனுக்கு நடந்த திடீர் திருமணம்… இனிமே டிஆர்பி எகிறிடும் மக்கா?

Ayyanar thunai: விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் சமீபத்தில் வெளியானாலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் முதல் ஹீரோயின் ஏற்கனவே தெரிந்த விஷயமாகி இருக்கும் நிலையில் இரண்டாம் நாயகி இப்போது கன்பார்ம் செய்யப்பட்டு விட்டார்.
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான சீரியல் அய்யனார் துணை. இதில் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் உள்ளிட்டோர் அண்ணன், தம்பிகள். இவர்கள் அப்பாவின் செய்கையால் இவர்களுக்கு யாரும் பெண் கொடுக்கவில்லை.
இதில் சோழன் தன்னுடைய முதலாளி நிலாவை காதலித்தாலும் அவருக்கு எதிராக சொல்லாமல் அவரை மனதை கரைத்து கட்டிக்கொண்டு வீட்டிற்கு அழைத்து வருகிறார். நிலா சோழனை காதலிக்கவில்லை என்றாலும் அப்பா, அண்ணன் பிரச்னையால் இந்த வீட்டில் வந்து தங்கி இருக்கிறார்.

அவர் சோழனின் அண்ணன், தம்பியுடன் நல்ல நட்பாகவே பழகுகிறார். இதில் சேரன் காதலிக்கும் பெண்ணான கார்த்திகாவை கல்யாணம் செய்து வைக்க முடிவெடுத்து அவர்களுக்கு கோயிலில் திருமணத்தினை ஏற்பாடு செய்துவிட்டார். ஆனால் கார்த்திகாவின் அப்பா, அம்மா ஒப்புக்கொள்ளவில்லை.
கோயிலுக்கு கார்த்திகாவை அனுப்பாமல் தடை விதித்து விடுகின்றனர். அவருக்கு இன்னொரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாண ஏற்பாடும் செய்து விடுகின்றனர். இந்நிலையில் கல்யாணத்துக்கு முந்தைய நாள் கார்த்திகா சேரன் வீட்டிற்கு வந்து என்னால் அவர் இல்லாமல் வாழ முடியாது என அழுகிறார்.
இதனால் அவருக்கு வீட்டிலே திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கும் நிலா சேரனை தயாராக சொல்லி விடுகிறார். கார்த்திகா மற்றும் சேரன் திருமணமும் நடந்து விடுகிறது. கார்த்திகா கழுத்தில் தாலி கட்டிவிட்டதால் இனி அவர் பெற்றோரால் எதுவும் செய்ய முடியாது. அதனால் அடுத்த ஜோடியும் செட்டில் ஆகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.