ஜாலி பண்ணும் மதி, மலர்… மாமியாருக்கு வயிறு எரியுதே!
அப்பா உடம்பு பிரச்சனை எனக் கூறியதால் ஃபுல் டாடி செக்கப் செய்ய ஆளை வர சொல்கிறார் பாக்கியராஜ். கண்டிப்பா நாளைக்கே வரணும் என வாதம் செய்து வர சொல்கிறார். அடுத்த நாள் காலை செக்கப் செய்ய ஆள் வந்துவிடுகிறார்.
எல்லா டெஸ்டுக்கும் எடுத்து கொண்டு மொத்தம் 7800 என்கிறார். பாக்கியராஜும் பணத்தை எண்ணிக்கொடுக்க சில்லறையாக 300 மட்டும் சுரேஷ் கொடுக்கிறார். பின்னர் மதி, மலர் இருவரும் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர்.
மதி ஜாக்கிங் செல்ல அவருடன் மலரையும் அழைக்கிறார். ஆனால் அவர் வீட்டில் என்ன சொல்வாங்க என பதட்டம் அடைகிறார். அதலாம் ஒன்னும் நடக்காது. வாங்க கிளம்பலாம் எனச் சொல்லி அழைத்து செல்கிறார். மாமியார் கடுப்பாகி விடுகிறார்.
மலரிடம் வேலை இல்லையா என ஒவ்வொன்னாக கேட்க அவரும் எல்லாமே முடிந்து விட்டதாக சொல்கிறார். பின்னர் வேறு வழி இல்லாமல் போ எனச் சொல்லிவிடுகின்றனர். மதி, மலரும் ஒன்றாக பார்க்குக்கு வாக்கிங் சென்று விடுகின்றனர்.
இரண்டு பேரும் பேசிக்கொண்டே நடக்க மலர் ரேவதிக்கு கால் செய்து என்ன வேலை செஞ்சிட்டு இருக்கீயா? வாக்கிங் போகாம சமைச்சிட்டே இருக்க சே சே எனக் கலாய்த்து விட்டு போனை வைக்கிறார். பின்னர் மதி வீட்டு செலவு பற்றி மலரிடம் கேட்கிறார்.
பாக்கியராஜ் தான் வீட்டோட எல்லா செலவையும் செய்வதாக சொல்கிறார். உங்களுக்கு எதுவும் கோபம் இல்லையா எனக் கேட்க அதெல்லாம் இல்ல. ஆனா பொண்ணுக்கு எதுவும் செய்ய முடியலைன்ற வருத்தம் தான் என்கிறார்.
அப்போ சரியாக ரேவதி அங்கு வர மூவரும் ஆச்சரியம் அடைகின்றனர். பின்னர் ரேவதி, மலர், மதி மூவரும் சிரித்துக்கொண்டே நடந்து செல்கின்றனர். என்ன பிரச்சனை மாமியார் ப்ளான் செஞ்சு வச்சிருக்கோ!
