மதிக்கு துணை நிற்கும் சுரேஷ்… அடுத்த லவ் ஸ்டாட் ஆச்சு போலயே!
தமிழ் சீரியல் நாயகிகள் பெரும்பாலும் அழுத முகத்துடன் எந்தவித சுயமரியாதையும் இல்லாமல் தான் வலம் வருவார்கள். ஆனால் இதில் வித்தியாசமாக அமைந்தவர் அழகே அழகு சீரியல் மதி. ஆனால் அவரையும் தற்போது கெடுத்து வைத்திருக்கின்றனர்.
வேலை நிரந்தரமாகும் என மதி சந்தோஷத்தில் இருக்க அதை தங்கராஜ் மூலம் கிடைத்து விட்டு அவரை தற்போது அழுக வைத்து விடுகின்றனர். மலர் கேட்டுக் கொண்டதற்காக சுரேஷ் காலேஜில் சென்று மதியை பார்க்கிறார்.
அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு வீட்டிற்கும் கிளம்புகிறார். மதிய அழுது கொண்டே இருக்க அவருக்கு சுரேஷ் சமாதானம் கொடுக்கிறார். அதே வேலையில் தங்கராஜ் இந்த விஷயத்தை ரேவதி மூலம் தெரிந்து கொண்டு சுரேஷிற்கு கால் செய்கிறார்.
பின்னர் மதி மற்றும் சுரேஷ் இருவரும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். மாமியார் மதி குறித்து நக்கலாக பேச அதற்கு சரியான பதிலடி கொடுக்கிறார் மலர். பின்னர் வீட்டில் எல்லோரும் இருக்க ரேவதி மற்றும் தங்கராஜ் வந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
