தங்கராஜின் அசிங்கமான வேலை… கடுப்பான மதி…

அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்
 
azhage azhagu

அழகே அழகு சீரியலில் நாளுக்கு நாள் தங்கராஜ் செய்யும்  வில்லத்தனம் கோபம் வருவதற்கு பதிலாக கடுப்புதான் பலருக்கு ஏற்படுகிறது. அந்த வகையில் இந்த முறை தன்னுடைய மனைவியையே மாட்டிவிட்டு இருக்கிறார்.

 மதியின் பிரச்சினையால் வீட்டிற்கு வரும் ரேவதி மற்றும் தங்கராஜ் இருவரும் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருக்கின்றனர். ரேவதியும் சந்தோஷமாக மலர் மற்றும் மதியுடன் பேசிக்கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறார்.

 அந்த நேரத்தில் சரியாக தங்கராஜ் வீட்டிற்கு கிளம்பலாம் என கூறிவிடுகிறார். அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என வரும் ரேவதியை சரியாக இவர்கள் கொடுமைக்காரர்கள் என நீ எப்படி சொல்லலாம் என போட்டுக் கொடுத்து விடுகிறார்.

 ரேவதி எவ்வளவு தடுத்தும் அப்பா அம்மாவையே இப்படி சொல்லலாமா என மாட்டி விட மாமியாரும் மீண்டும் தன்னுடைய கோபத்தை  ரேவதியிடம் காட்டுகிறார். இதனால் ரேவதி கலக்கத்தில் இருக்கிறார். ஆனால் இதை பார்த்துக் கொண்டிருந்த மதி மீண்டும் கோபமாகிவிடுகிறார்.

கதயே இல்லாமல் இயக்குனர் ரீல் சுத்தும் சாக்கில் மாற்றி மாற்றி புரணி பேசவிட்டு கொண்டு இருக்கிறார். எப்போ கதை தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். 


 

From Around the web