மதிக்கு பிரச்சனை கொடுக்கும் மாமியார்… சிங்கத்த சொரண்டுறாங்களே!
வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் மதியை அடக்கி விடலாம் என நம்பிக்கையில் மாமியார் தொடர்ந்து பிரச்சினை கொடுத்துக் கொண்டிருப்பது நடந்து கொண்டிருக்கிறது.
மலரை வீட்டு வேலை பார்க்க அனுப்பி விட்டு தனக்கு இஷ்டப்பட்ட சமையலை சமைக்க சொல்கிறார் மாமியார். மதி சிம்பிளாக முடித்து விடலாம் என திட்டம் போட ஆனால் விருந்து சாப்பாடு செய்ய மாமியார் ஆர்டர் போடுகிறார்.
இருந்தும் மதி என்ன செய்ய வேண்டும் என கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் கடுப்பாகும் மாமியார் நீ எதையோ சமைச்சு வை என திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். மதியும் தனக்கு தெரிந்த சமையலை சமைத்து வைத்துவிடுகிறார்.
திடீரென சுரேஷ் மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வருகிறார். எல்லோரும் அமர்ந்து சாப்பிட மதியை பரிமாற சொல்கிறார். மதிய சாப்பாடு எடுத்து வைக்க அவருடைய சமையலை மாமியார் வன்மத்துடன் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சமையல் நல்லாவே இல்ல மதிய சமையல் தான் நல்லா இருக்கும் என மாமனார் பேச மலர் சிரித்துக்கொண்டே இதற்கு முன்னாடி நீங்க சொல்லவே இல்லையே என கோபத்துடன் அவரிடம் கேட்கிறார். அதிரடி மதி யூசுவல் ஹீரோயினாக மாறிவிட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
