மாமியாருக்காக போராடும் மதி, மலர்… மாறப்போகும் கூட்டணி!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மாமியாருக்கு தலைவலி மண்டையை பொளக்க அவரை தூங்க வைத்து இருக்கிறார் மதி. ஆனால் மாமனார் சத்தம் போட இரண்டு மருமகள்களும் கடுப்பில் இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் திமிராக பேசி அவரை எழுப்பி விடுகிறார்.
அவரும் வலி தாங்காமல் எழுந்து உட்கார, சாமி கும்பிடணும். போய் குளிச்சிட்டு வேலை செய்றத பாரு என எழுப்பிவிடுகிறார். மதி சும்மா இல்லாமல் அவங்க தலைவலில இருக்காங்க எனக் கூற அவ தூங்குனா மகாலட்சுமி எப்படி வரும் என சிரித்து மேலும் கடுப்பாக்குகிறார். அவர் சென்று விட மாமியார் குளிக்க செல்கிறார்.
தங்கராஜ், வீட்டில் சண்டை நடந்து இருக்குமே என திமிராக ரேவதியிடம் கேட்க அவர் அதெல்லாம் ஒன்னும் இல்லையே என்கிறார். உங்களுக்கு இதெல்லாம் தேவையா எனக் கேட்க வீட்டுல சொல்லாம ஏன் போகணும் என அவரும் விடாப்பிடியாக பேசுகிறார்.
பின்னர் இரண்டு மருமகள்களும் வேலை முடித்து வைக்க சாமி கும்பிட எல்லாரும் கூடி இருக்கின்றனர். அங்கையும் மாமியாரை கூப்பிட மலர் சென்று அழைக்கிறார். நீங்க இங்கையே இருங்க எனக் கூற சாமி புரிஞ்சிக்கும். உங்க மாமாவை நினைச்சா தான் என பயந்து எழுந்து வருகிறார்.
இருந்தும் தலைவலியில் அவர் இருக்க மதி சுரேஷை டாக்டரிடம் அழைத்து செல்ல சொல்கிறார். இப்போதும் மாமனார் திமிர் பேசுகிறார். சுரேஷ் இன்னொரு மாத்திரை போடுங்க. சரியில்லைனா டாக்டரிடம் சாயிந்திரம் போகலாம் எனக் கூறிவிடுகிறார்.
ஆனால் மதி பொறுக்காமல் வாங்க டாக்டரிடம் எனக் கூறிவிடுகிறார். மலரும் வரேன் எனக் கூற மாமா எதுவும் கேட்க போறாரு என்கிறார். அதனால் மதி மட்டும் மாமியாரை அழைத்துக்கொண்டு கிளினிக்குக்கு செல்கிறார். இனிமேல் மூவரும் கூட்டணி போடுவார்களோ?
