மதியால் பிரச்சனையில் சிக்கும் ரேவதி! அடுத்த சம்பவம் ஆரம்பிச்சிடுச்சுப்பா!
அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் தொகுப்புகள்.
ரேவதியை தங்கராஜ் அடித்து விட அதே நேரத்தில் சரியாக அவருக்கு கால் செய்யும் பாக்கியராஜுக்கு விஷயம் தெரிந்து விடுகிறது. இதனால் நேராக தங்கச்சிக்கு நியாயம் கேட்டு அவர் வீட்டுக்கு சென்று சத்தம் போடுகிறார்.
ஆனால் தங்கராஜ் கூச்சமே படாமல் அவர் செய்தது சரியென பேசுகிறார். தங்கச்சிக்காக தான் அமைதியாக இருந்தேன். இனிமேல் இப்படி இருக்க முடியாது. ரேவதி இங்க கஷ்டப்பட வேண்டாம். நீ வா நம்ம வீட்டுக்கு போவோம் என சத்தம் போடுகிறார்.
ஆனால் தங்கராஜ் அப்போதும் திமிராக ரேவதியை உள்ளே போ என மிரட்டி கொண்டு இருக்கிறார். ஒரு பக்கம் அண்ணன் இன்னொரு பக்கம் புருஷன் என ரேவதி மிரண்டு நின்றாலும் தன்னுடைய சுயமரியாதைகாக அண்ணனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
பாக்கியராஜ் நேராக வீட்டுக்கு கூப்பிட்டு வர குடும்பமே அதிர்ச்சி அடைகின்றனர். பின்னர் மதி என்னால் தான் நீங்க இந்த கஷ்டத்துல என தயக்கமாக பேச அதெல்லாம் இல்ல. உன்கிட்ட நான் சொன்னது பெருசா கவலை இல்ல. ஆனா இவர் இப்படி இருக்காரேனு தான் யோசனையா இருக்கு என்கிறார்.
பின்னர், மாமியார் வந்து என்ன ஆச்சு எதுக்காக உன்ன அடிச்சாரு எனக் கேட்க நான் அடி வாங்குனதுக்கு உனக்கு நியாயம் சொல்லணுமா என காட்டமாக கேட்கிறார். இதனால் மாமியார் பேசாமல் சென்று விடுகிறார். ரேவதியை சமாதானம் செய்ய வீட்டிற்கு தங்கராஜ் வருகிறார். மன்னிப்பு கேட்டு கையெடுத்து கும்பிடுகிறார்.
ரேவதி எங்கையும் வர மாட்டா? இங்கையே தான் இருப்பா என திட்டவட்டமாக பேசுகிறார். தங்கராஜ் ரேவதி மற்றும் மதி பற்றி போட்டு கொடுப்பார் என்றே நம்பப்படுகிறது. ரேவதியின் நிலை இனி என்ன ஆக போகுதோ?