ரேவதி எடுத்த திடீர் முடிவு! நோஸ்கட் வாங்கிய தங்கராஜ்!

சாதாரண குடும்ப பஞ்சாயத்தை வைத்து ஒவ்வொரு வாரமும் பரபரப்பான காட்சிகளுடன் இன்றைய எபிசோட்டும் இன்னொரு அதிரடியாக அமைந்து இருக்கிறது. 

 
azhage azhagu

ரேவதியிடம் மன்னிப்பு கேட்டு அவரை வீட்டுக்கு கூட்டி போகும் முடிவில் வருகிறார் தங்கராஜ். ஆனால் எல்லாரும் அமைதியாக இருந்தாலும் தங்கராஜிடம் நேருக்கு நேராக கோபமாக பேசுகிறார் பாக்கியராஜ். ரேவதி வரமாட்டாள் என பிடிவாதமாக சொல்கிறார். 

குடும்பமே மாப்பிள்ளை மன்னிப்பு கேட்டு விட்டதால் ரேவதி மன்னிக்கலாம் எனக் கூற பாக்கியராஜ் விடாப்பிடியாக இருக்கிறார். அண்ணன் மேல மரியாதை வச்சிருந்தா ரூமுக்கு போ என்கிறார். தங்கராஜ் மன்னிப்பு கேட்கிறேன். வீட்டுக்கு வா என்கிறார். 

ஆனால் ரேவதி பாக்கியராஜ் பேச்சை கேட்டுவிட்டு ரூமுக்குள் சென்று விடுகிறார். மாமியாரும் அவ இங்க ரெண்டு நாள் இருக்கட்டும் எனக் கூற நான் கெட்டவனா போய்ட்டேனே எனக் கடுப்பானாலும் பொறுமையாக பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறார். 

ரேவதி அமைதியாக ரூமுக்குள் இருக்க மதி மற்றும் மலர் இருவரும் சமாதானமாக பேசி அவரை கலகலப்பாக்கி கொண்டு இருக்கின்றனர். ஒருகட்டத்தில் ரேவதி நாங்க ரெண்டு பேரும் அடி வாங்கிட்டோம் அண்ணி நீங்க தான் மிச்சம் எனக் கலாய்க்கிறார். 

அப்போ மாமியார் வந்து தன்னுடைய உடல்நிலை குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். செக்கப் செய்ய கேட்டதுக்கு மாமனார் சொன்னதையும் சொல்ல மருமகளாக மலர் கவலைக்கொள்கிறார். ரேவதி இப்படி ஆனாதான் அம்மா திருந்துவாங்க என்கிறார். 

வீட்டில் தங்கராஜ் மாமியார் அவரை திட்டிக்கொண்டு இருக்கிறார். பின்னர் தரணி அம்மாவிடம் போகணும் என அழுக அவரை சமாதானம் செய்கிறார். அவ இருந்தா வீட்டை நல்லா பாத்துப்பா. என்னால் இவ்வளோ தான் சமைக்க முடியும் என்கிறார். இனி இன்னும் ரேவதி விஷயத்தில் பரபரப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web