என்ன சுரேஷூ? லவ்ஸா? ரைட்டு மதிக்கிட்ட அடுத்த அடிக்கு ரெடியாகிடுப்பா!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சீரியலாக வலம் வரும் அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள். 

 
azhage azhagu

மதியின் வேலை போனதுக்கு தன்னுடைய மாமா தான் காரணம் என்பதால் சுரேஷ் தர்ம சங்கடமாக இருக்கிறார். பின்னர் மதி நேர்முக தேர்வு செல்ல அவரை தானே அழைத்து செல்வதாக சொல்கிறார். மதியும் அமைதியாக செல்கிறார். 

பின்னர் வீட்டில் சொல்லிவிட்டு செல்ல மலர், மதிக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி சுரேஷ் வருவதற்கு கலாய்த்தும் அனுப்பிவிடுகிறார். இதை பார்க்கும் மாமியார் சேந்துட்டாங்களா எனக் கேட்க மலர் ஆச்சரியமாக அவரை பார்க்கிறார். 

பின்னர் மலர், மாமியார், ஸ்ருதி மூவரும் வீட்டில் துணி காய வைத்து கொண்டு இருக்கின்றனர். அப்போது மலர் அம்மா கால் செய்து தம்பிக்கு பெண் பார்க்க செல்வதாக சொல்கிறார். மலரும் தான் வருவதாக சொல்லிவிடுகிறார். 

இதை கேட்கும் ஸ்ருதி முகம் மாறுகிறது. போனை வைக்கும் மலர் நாளைக்கு செல்ல மாமியாரிடம் அனுமதி கேட்கிறார். அவர் முதலில் தயங்கி விட்டு பின்னர் சரியென சொல்லிவிடுகிறார். ஸ்ருதியை கவனிக்கிறார் மலர். 

அவனுக்கு பொண்ணு பார்த்தா நீ ஏன் ஒரு மாதிரியா இருக்க எனக் கேட்க ஸ்ருதி தயங்குகிறார். எனக்கு புரியுது. ஆனா இதெல்லாம் சரிப்பட்டு வராது எனக் கூறிவிட்டு செல்கிறார். மதியை ட்ராப் செய்யும் சுரேஷ் நல்லா பண்ண சொல்லிவிட்டு செல்கிறார். 

தங்கராஜ் அம்மா, மனைவிக்கு டெஸ்ட் எடுத்து விட்டு அந்த ரிசல்ட் வந்துவிட்டதாக சொல்கிறார். அம்மாக்கு எதுவும் இருக்காது. ஆனா ரேவதிக்கு எதுவும் இருக்கும் என திமிராக பேசுகிறார். அது போல டாக்டர் வந்து ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு அம்மாக்கு ஒன்னுமில்லை எனக் கூறிவிட்டு ரேவதி ரிப்போர்ட்டை பார்ப்பதுடன் எபிசோட் முடிந்தது. 

From Around the web