மலருக்கு வரும் பிரச்சனை… ஓவர் பில்டப் தரும் குடும்பம்… போச்சுப்பா!
மதி மற்றும் மலர் இருவரும் வாக்கிங் முடித்துவிட்டு வீட்டுக்கு வருகின்றனர். நினைத்தது போலவே மாமியார் மலரை வெளியில் போனதில் இருந்து அவங்க வந்தாங்க இவங்க வந்தாங்க என புலம்பி தள்ளுகிறார்.
பொறுமை இழந்த மலரும் நான் நல்லா இருந்தா தானே. உங்கள நல்லா பாத்துக்க முடியும். அப்போ என்னோட ஆரோக்கியமும் முக்கியம் தானே. அதான் வாக்கிங் போனேன். நான் போய் சேந்துட்டா உங்களை யார் பாத்துப்பாங்க என்கிறார்.
இதை கேட்ட மாமியார் எதுவும் சொல்லாமல் சென்று விடுகிறார். மதிக்கே ஆச்சரியமாகி அவரை பார்க்க நானா இப்படி பேசினேன் என்கிறார். பின்னர் மதி மற்றும் மலர் பேசிக்கொண்டு இருக்கும் போது மலரின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிகிறது.
அம்மாவை பார்க்க கூட முடியாமல் திணறி நிற்கிறார் மலர். அதே நேரம் மாமனாரின் ரிப்போர்ட் வர சாதாரண சுகர் பிரசருக்கே ஓவர் ஆக்டிங் போட்டு இப்போவே டாக்டரை பாக்க வேண்டும் என அலப்பறை கொடுத்து கொண்டு இருக்கின்றனர். பாவமப்பா இந்த புள்ளை!
