மலருக்காக நின்ற மதி… சரியாக சிக்கிய குடும்பம்… செமையா இருக்கே!

அழகே அழகு சீரியலில் இன்று நடக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள். 

 
azhage azhagu

மலர் கோயில் போய்விட்டு வராமல் இருக்க அதே நேரத்தில் ஹாஸ்பிட்டல் போன மாமியார் மாமனார் வந்து இறங்குகின்றனர். மதி பயப்படாமல் பேசி அவங்க கோயில் சென்று இருப்பதாக சமாளித்து விடுகிறார். 

பின்னர் வெளியில் வந்து அவருக்காக காத்திருக்க ஸ்ருதி விபூதி பிரசாதம் இல்லாம எப்படி எனக் கேட்கிறார். மதியும் சரிதான் வீட்டுக்குள் போய் எல்லாத்தையும் எடுத்துட்டு வா என அனுப்பிவிட சரியாக மலரும் வந்து இறங்குகிறார். 

அய்யோ வந்துட்டாங்களா என்ன சொன்னாங்க என பேச்சை கேட்காமல் பதறி துடிக்க மதி அமைதியாக அவரை சமாதானம் செய்கிறார். பின்னர் விபூதியை வைத்துவிட்டு வீட்டில் எடுத்ததை வைத்து விட்டு வீட்டுக்குள் அனுப்புகின்றனர். 

மலரும் வீட்டுக்குள் வந்து மாமியாரிடம் பேசி சமாளித்து விடுகிறார். எல்லாரும் சாப்பிட உக்காந்த மாட்டிப்போம் எனக் கூற அதெல்லாம் இன்னும் பிபி கொலஸ்ட்ரால் பத்திதான் நினைச்சிட்டு இருப்பாங்க என மதி கூலாக பேசுகிறார். 

மாமியார் கணவரின் பிபி பிரச்சனையை நினைச்சிக்கிட்டே சாப்பிட்டு சென்று விடுகிறார். மலர் பின்னர் போனில் வீட்டில் நடந்த விஷயங்களை ரேவதியிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். என்ன ஒரே டல்லடிக்கிது!

From Around the web