மலருக்காக அடுத்த ரிஸ்க் எடுக்கும் மதி… என்ன ஆகப்போகுதோ?

விஜய் தொலைக்காட்சியின் அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

 
azhage azhagu

மலரின் அம்மாவிற்கு உடம்பு முடியாத நிலையில் அவரை போய் பார்க்க முடிவெடுத்து இருக்கின்றனர் பாக்கியராஜ் மற்றும் மலர். ஆனால் பாக்கியராஜின் அப்பாவின் ஹெல்த் ரிப்போர்ட்டில் பிபி சுகர் அதிகமாகி இருக்க அவர் உடனே டாக்டரை பார்க்க வேண்டும் என அடம் பிடிக்கிறார்.

பாக்கியராஜ் எவ்வளவு சொல்லியும் அவர் இன்றே கிளம்ப வேண்டும் என விடாப்பிடியாக நிற்க வேறு வழியில்லாமல் பாக்கியராஜ் அழைத்து சென்று விடுகிறார். மதி சுரேஷை கேட்கலாம் என சொல்ல பாக்கியராஜ் அதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறார்.

அம்மாவின் உடல்நிலை குறித்து கவலையாக இருக்கும் மலரிடம் நீங்க போய் உங்க அம்மாவை பாத்துட்டு வாங்க என்கிறார். வீட்டில் இருக்கிறவங்க கிட்ட சொல்லாம போக முடியுமா என கேட்க அவங்க வரதுக்குள்ள நீங்க வந்துடலாம் என தைரியம் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

மலர் அவர் அம்மாவை சென்று வீட்டில் பார்த்துவிட்டு நலம் விசாரிக்கிறார். அதே நேரத்தில் மதி இங்கு சமையல் வேலையையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் மலர்  வீட்டிற்கு கிளம்பி விட அதே நேரத்தில் பாக்கியராஜ் தன் பெற்றோருடன் வீட்டிற்கு ஆட்டோவில் கிளம்புகிறார்.

அவர்களை தடுக்க பார்க்க மலர் எவ்வளவு முயற்சி செய்தும் பாக்யராஜிற்கு அந்த விஷயம் புரியாமல் போகிறது. இதனால் வேறு வழியில்லாமல் மதியிடம் ஃபோன் செய்து நடந்ததை கூறுகிறார். நான் பார்த்துக் கொள்கிறேன் என மதி நம்பிக்கை கொடுக்கும் நேரத்தில் பாக்யராஜ் சரியாக வீட்டிற்கு வருவதுடன் எபிசோட் முடிந்தது.

From Around the web