மதியிடம் சிக்கிய தங்கராஜ்! உனக்கு இனிமே சங்குதான் மகனே!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
 
azhage azhagu

ரேவதிக்கு கால் செய்யும் பாக்கியராஜ் அவர்கள் குரூப் பத்தி பேசிக்கொண்டு இருக்கிறார். பின்னர் ரேவதி கிச்சனுக்கு வர தங்கராஜ் மற்றும் அவர் அம்மா பேசிக்கொண்டு இருக்கின்றனர். என்னடா உன் மாமியார் குடும்பம் உன்னை கூப்பிடவே இல்லை என்கிறார். பிரச்சனை எதுவும் வரலை என்கிறார். 

அந்த புது பொண்ணு அப்படிப்பட்ட ஆள் மாதிரி தெரியலையே என்கிறார். அவ வேலைக்கு போய்ட்டு இருந்தா அந்த வேலையை எனக்கு தெரிஞ்சவரோட மச்சான் தான் பிரின்சிபால். அவரிடம் பேசி வேலை இல்லாமல் பண்ணிவிட்டேன் என்கிறார். 

இதை கேட்கும் ரேவதி உடனே தங்களுடைய குரூப்பில் மதியின் வேலை போனதக்கு காரணமே தங்கராஜ் எனக் கூறிவிடுகிறார். இதில் கடுப்பான மதி உடனே கிளம்புகிறார். மலர் பதறி அவரை தடுக்க பார்க்க விடாப்படியாக மதி கிளம்பி செல்கிறார். 

மலரும் ரேவதிக்கு விஷயத்தை சொல்ல இருவரும் பதறுகின்றனர். மதி தங்கராஜும் வீட்டில் இருக்க மதி நேராக வந்து என் வேலை போனதுக்கு காரணம் நீங்க தானா? ரேவதியிடமும் இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா என பிரச்சனையிலும் அவரை மாட்டிவிடாமல் பேசுகிறார். 

தங்கராஜும் ஆமா நான் தான் செஞ்சேன் என்கிறார். உங்களுக்கு சென்னைல இருக்க எல்லா காலேஜுமா தெரியும். 10 காலேஜுல வேலை இல்லாம பண்ணுவீங்களா? தங்கராஜால் மதி வேலை இல்லாமல் உக்காந்தா என இருக்காது. இதை விட நல்ல வேலையை வாங்கி காட்டுறேன் என சவால் விட்டு செல்கிறார். 

From Around the web