சுரேஷை காலி செய்த மதி… பாக்கியராஜை கடுப்பாக்கும் மலர்!... என்ன ரிவெஞ்சா?

இன்றைய எபிசோட்டில் மதியின் தைரியத்துக்கு சுரேஷ் அவரின் காதலை அடைய ரொம்ப பாடுபட வேண்டி இருக்கும் போல. அந்த ரேஞ்சில் முதல் அடியை வாங்கி விட்டார்.
 
azhage azhagu

அடிதடி வில்லத்தனங்களுடன் இருக்கும் சீரியல்களுக்கு மத்தியில் உண்மையான குடும்பக் கதையாக தற்போது கல்லாகட்டி வரும் அழகே அழகு சீரியலில் இன்று நடந்த எபிசோடின் தொகுப்பு.

 தங்கராஜின் அறிவுரையின் பேரில் மதியிடம் எல்லை மீறும் சுரேஷை அவர் பிடித்து தள்ளி விடுகிறார். இதில் நிலை தடுமாறும் சுரேஷ் நேராக கட்டிலில் மோதி அவர் தலையில் அடிபட்டு விடுகிறது. இதனால் அவர் ஐயோ எனக் கத்த பதறிப்போய் ரேவதி மற்றும் தங்கராஜ் இருவரும் ரூமிற்கு வந்து பார்க்கின்றனர்.

சுரேஷ் அழைத்து சென்று ஃபர்ஸ்ட் எய்ட் கொடுத்து அவரை சமாதானம் செய்து ரூமிற்கு அனுப்பி வைக்கின்றனர். ரேவதி மதியை மற்றொரு ரூமில் சென்று தூங்குமாறு அவரையும் அனுப்பிவிடுகிறார். தங்கராஜிடம் இனி இப்படி ஒரு அறிவுரை கொடுக்காதீங்க என சொல்லிவிட்டு செல்கிறார்.

அதே நேரத்தில் தனக்கு அம்மாவை தான் பிடிக்கும் என பாக்கியராஜ் கூறியதிலிருந்து அவரிடம் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார் மலர். எது கேட்டாலும் உங்களுக்கு அம்மாவை தானே பிடிக்கும் அவர்களிடம் கேளுங்கள் என அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்.

வீட்டில் நடந்த விஷயங்களை ரேவதி கால் செய்து மலரிடம் கூற அவரும் சுரேஷை திட்டிக் கொண்டிருக்கிறார். பாக்யராஜ் வந்து கேள்வி கேட்க மீண்டும் அவரை வெறுப்பேற்றும் விதமாக பேசிவிட்டு மலர் அங்கிருந்து சென்று விடுகிறார்.

From Around the web