மலர், ரேவதிக்கு கிளாஸ் எடுக்கும் மதி! என்ன நடக்க போகுதோ!
சுரேஷ் மற்றும் மதி இருவரும் ரூமில் இருக்க இருவரும் அமைதியாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். மதியை அடித்தது குறித்து சுரேஷ் மன்னிப்பும் கேட்கிறார். சண்டக்கோழி ரெண்டும் அமைதி மோட்டுக்கு போய் இருக்காங்கப்பா!
ரேவதி வீட்டில் இருக்க மலருடன் அவர் மாமியார் வந்து பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் புலம்ப மலர் அவருக்கு சமாதானம் செய்கிறார். அந்த நேரத்தில் வெளியில் இருந்து வந்த பெண் ரேவதி குறித்து கிண்டலாக கேட்டு கொண்டு இருக்கிறார்.
ஆனால் மலர் அமைதியாக வீட்டுக்கு பொண்ணு வரதுல என்ன தப்பு இருக்க எனக் கூறி அவரை அனுப்பி விடுகிறார். பின்னர் மாமியாரும் இப்போ இது பேச்ச போச்சு என்ற ரீதியில் அவர் அக்மார்க் நடிப்பில் பொண்ணு பாசத்தை கொட்ட மலர் சமாதானம் செய்கிறார்.
பின்னர் ரேவதி ஹாலுக்கு வர அவரை வீட்டுக்கு அனுப்புவது குறித்து பேச்சு அடிப்படுகிறது. ஒரு கட்டத்தில் பாக்கியராஜ் நான் ரேவதியை அனுப்ப மாட்டேன் என பிடிவாதம் பிடிக்க சுரேஷ், அப்பா, அம்மா என எல்லாரும் மாப்பிள்ளையுடன் அனுப்ப வேண்டும் என்கின்றனர்.
ஆனால் ரேவது கோபப்பட்டு இந்த பேச்சு இப்போ வேண்டாம் என மறுத்து விடுகிறார். பின்னர் மதி வேலைக்கு அப்ளே செய்து கொண்டு இருக்க அங்கு வருகிறார்கள் மலர் மற்றும் ரேவதி!
ரெண்டு பேருமே மதி குறித்து பெருமையாக பேச நீங்க இப்படியே இருக்க கூடாது என மதி அறிவுரை சொல்கிறார். எங்களுக்கு இப்படியே பழகிட்டு என்கிறார் மலர். அப்போ மூணு பேருமே வேலைக்கு போவாங்களோ!