மருமகள்கள் வெறுக்கும் மாமியார் இவங்க தான் போலயே! அழகே அழகு அப்டேட்!
Azhage Azhagu: விஜய் தொலைக்காட்சியின் லேட்டஸ்ட் ஹிட் தொடர்களில் ஒன்றாக இருக்கும் அழகே அழகு சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து வருகிறது.
தங்கராஜ் ஒரு பிரச்சனையை கிளப்பலாம் என்ற ஐடியாவில் வீட்டுக்கு வருகிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த விஷயம் நடக்காமல் பாக்கியராஜ் புரோமோஷன் விஷயம் தெரிந்தவுடன் அப்பா, சுரேஷ் என எல்லாரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி விடுகின்றனர்.
இந்த கொண்டாட்டத்தை பாக்கியராஜ் மதி, ரேவதி, மலருடன் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார். அதிலும் தங்கராஜ் பல்ப் வாங்கி சம்பவத்தினை சொல்லி ரேவதி காமெடி செய்து கொண்டு இருக்கிறார். பின்னர் மதியிடம் முன்பே புரோமோஷன் கிடைத்த விஷயத்தை சொல்கின்றனர்.
எல்லாரும் சந்தோஷமாகி பேசி சிரித்து கொண்டு இருக்க அதை கேட்டு அங்கு வருகிறார் தங்கராஜ். ரேவதியும் அமைதியாக அந்த இடத்தினை விட்டு செல்கிறார். பின்னர் காரில் சென்று கொண்டு இருக்கும் போது ரேவதியிடம் என்ன பேசுனீங்க எனக் கேட்கிறார்.
ரேவதியும் இல்லாத விஷயங்களை சொல்லி சமாளிக்கிறார். பின்னர் வீட்டில் மலர் வேலை செய்து கொண்டு இருக்க மதியும் உதவி செய்து கொண்டு இருக்கிறார். அப்போது மாமியார் ஹாலில் உட்கார்ந்து கொண்டு மதியிடம் இருமி காட்டுகிறார்.
மதிக்கு புரியாமல் அங்கிருந்து கடந்து விட சுரேஷ் டம்பளரை எடுத்து போக மாட்டிங்கிறாங்க என அவரும் கடுப்படிக்கிறார். பின்னர் மதி வரும் போது அவரை நிறுத்தி ஏன் டம்பளரை எடுத்து போடலை. எல்லாம் உன் புருஷன் குடிச்சது தானே என்கிறார்.
இதில் கடுப்பான மதி குடிச்சவருக்கு எடுத்து போட தெரியாதா? ஆம்பளைங்க அதை செய்யணுமா எனக் கேட்க அவர் வேலையை அவர் தானே செய்யணும் என்கிறார். பின்னர் உங்க வீட்டில் என்ன வளத்தாங்க என மாமியார் கேட்க என்னை சரியாதான் வளத்துருக்காங்க.
உங்க பையனை சரியா வளக்கலை எனக் கடுப்படித்து விட்டு செல்கிறார். இதில் மாமியார் நெஞ்சு வலி வந்தது போல நடித்து சீன் போட மலருக்கு கடுப்பாகி அவரை பார்த்து கொண்டு இருக்கிறார். பின்னர் மதியும் அமைதியாக நிற்கிறார். மாமனார் வந்து கேட்க வலிப்பது போல சீனை ஓவரை போட்டு சுரேஷை பார்க்கணும் என டிராமாவை போட்டுக்கொண்டு இருக்கிறார்.
