சுரேஷுக்கு ஃபர்ஸ்ட் நைட் ஐடியா கொடுக்கும் தங்கராஜ்… அடி வாங்க ரெடி ஆகுப்பா!

மூத்த மருமகள் மலருக்கும் இரண்டாவது மருமகள் மதிக்கும் இடையே விழுந்திருக்கும் விரிசல் சரியாகி இருவரும் மீண்டும் அக்கா தங்கையாக வலம் வருவார்களா?
 
azhage azhagu

அழகே அழகே சீரியல் இன்றைய எபிசோட் பார்ப்பதற்கு பல கலாட்டாக்களை கொண்டு களம் இறக்கி இருக்கின்றனர்.

மதியை பார்த்துவிட்டு அப்பா வீட்டிற்கு கிளம்புகிறார். ரேவதியும் மற்றும் மதி பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்கு மலர் கால் செய்து மதி கொடுத்து விசாரிக்கிறார். மதி தான் பேச வேண்டும் என போனை கேட்க மலர் தான் பிஸியாக இருப்பதாக சொல்லி சமாளித்து விடுகிறார்.

ஒற்றுமையாக இருந்த இரண்டு மருமகள் தற்போது மனக்கசப்பில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொண்டிருப்பது பார்ப்பதற்கு வித்தியாசமான நிகழ்வாக தான் பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து சுரேஷ் மற்றும் தங்கராஜ் வரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ரேவதியை கூட ஒழுங்காக பார்த்துக் கொள்ளாத தங்கராஜ் சுரேஷிற்கு கல்யாண அட்வைஸ் தருகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் சீக்கிரமாக சேர்ந்து வாழ அவருக்கு அட்வைஸ் செய்கிறார்.

போலீசாக இருக்கும் சுரேஷ் மாமா பேச்சை தட்டாமல் கேட்டு மதியிடம் கண்டிப்பாக அடி வாங்க போவது உறுதி தான். இந்த வாரம் ப்ரோமோவில் அதை எதிர்பார்த்து தான் பலரும்  அந்த எபிசோடை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பாக்யராஜ் தன் குழந்தையை தூங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.. எனக்கு உன்னை தான் பிடிக்கும் என அவர் கூறி அவரை சமாதானம் செய்து தூங்க வைக்கிறார். இதை கேட்டு கடுப்பில் மலர் அமர்ந்திருக்க அவரை சமாதானம் செய்ய வருகிறார் பாக்யராஜ்.

 குழந்தையை விடுங்க உங்களுக்கு என்ன பிடிக்குமா அம்மாவை பிடிக்குமா என கேள்வி எழுப்புகிறார். ஆனாலும் பாக்கியராஜ் அசராமல் தன்னுடைய அம்மாவிற்கே முக்கிய இடம் கொடுக்க இதில் மலர் கடுப்பாகி அவரை திட்ட தொடங்கி விடுகிறார். கடந்த  சில எபிசோடுகளாக சோகமுடன் முடியும் அழகே அழகே இன்று கலகலப்பாக  முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web