தங்கராஜுக்கு பெர்ஃபெக்ட் ரிவென்ச் கொடுத்த ரேவதி… மாஸா இருக்குல!
பெண்கள் மீதான அடிமைத்தனத்தை அதிகமாக பேசி வருகிறது அழகே அழகு சீரியல். அந்த வகையில் தனக்கு நடந்த பிரச்சனைக்கு ரேவதி கொடுத்த சரியான பதிலடி பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தங்கராஜ் தன்னுடைய மாமனார் மாமியாரிடம் ரேவதி அவர்களை கொடுமைக்காரர்கள் எனக் கூறியதாக போட்டுக் கொடுத்து விடுகிறார். இதனால் ரேவதி கண்கலங்கி தன்னுடைய வீட்டில் இருந்து கிளம்புகிறார். காரில் வரும்போது தங்கராஜிடம் ஏன் இப்படி சொன்னீர்கள் என சத்தம் போடுகிறார்.
தங்கராஜும் மழுப்பலாக பதில் சொல்லி ரேவதியை சமாளிக்கிறார். வீட்டில் மாமியார் அடுத்த ரவுண்டு நாடகத்தை போட்டு தன்னை ரேவதி இப்படி சொல்லி இருக்கக் கூடாது என சீன் போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் மாமனார் தங்கராஜிற்கு பேச தெரியவில்லை என மாற்றிப் பேசுகிறார்.
இதனால் மலர் மற்றும் பாக்யராஜ் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின்னர் மாப்பிள்ளை எதிராக இப்பொழுதுதான் முதலாவது முறையாக பேசி இருக்கிறார் என இருவரும் பேசி சிரித்துக்கொண்டிருக்கின்றனர். வீட்டிற்கு வரும் ரேவதி மற்றும் தங்கராஜ் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
மாமியாரை அழைத்து உங்களிடம் ஒன்று சொல்லணும் எனக் கூறுகிறார். என்னாச்சு என கேட்க மாமா செத்ததுக்கு நீங்கதான் காரணம் என உங்க மகன் சொன்னதாக மாட்டி விடுகிறார். இதில் தங்கராஜ் அம்மா அல்லது நாடகம் போட தங்கராஜும் அதிர்ச்சியில் தன்னுடைய அழுகையை தொடங்கி விடுகிறார்.
நேற்று அழுது பாவமாக நின்ற ரேவதி இன்று சத்தம் இல்லாமல் செய்திருக்கும் செய்தி ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவமதிப்பு நடக்கும் போது பெண்கள் ரேவதி மாதிரி நடக்க வேண்டும் எனவும் கூற தொடங்கிவிட்டனர்.
