மதியிடம் எல்லை மீறும் சுரேஷ்… மண்டையை உடைச்சி விட்டுடுச்சு இந்த பொண்ணு!
விஜய் தொலைக்காட்சியின் வைரல் சீரியலாக மாறிவரும் அழகே அழகு தொடரில் இன்றைய எபிசோட் பலருக்கு பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரேஷ் மற்றும் தங்கராஜ் இருவரும் பேசிக் கொண்டிருக்க, இந்த பிரச்சனைக்கு மொத்த காரணமும் நீதான். நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழ்ந்து இருக்க வேண்டும். டைம வேஸ்ட் பண்ணாம அந்த வேலையில் இறங்கு எனக் கூறுகிறார்.
அந்த நேரத்தில் அங்கு வரும் ரேவதி இப்படி ஒரு அறிவுரையை அவனுக்கு நீங்க ஏன் சொன்னீங்க. அந்த முடிவை அவங்க தானே எடுக்கணும் என தங்கராஜை சரி செய்ய பார்க்க ஆனாலும் அவர் பிடிவாதமாக சுரேஷிற்கு உடனே வாழ்க்கையே தொடங்க வேண்டும் என அறிவுரை சொல்லி அனுப்பி விடுகிறார்.
இதனால் புருஷன் பேச்சை தட்ட முடியாத ரேவதியும் மதியை சுரேஷ் இருக்கும் ரூமிற்கு அனுப்பி வைக்கிறார். அதே நேரத்தில் தங்கராசு ரேவதியை அழைத்து அவரும் பாசமாக பேசிக் கொண்டிருக்கிறார். சுரேஷ் ரூமில் மதி வந்து அமர அவரிடம் காதல் வசனம் பேச தொடங்குகிறார்.
மதி இதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல நம்ம வாழ்க்கையை நம்ம தொடங்கலாம் என சுரேஷ் கூறுகிறார். ஒன்றும் புரியாமல் மதிப்பார்க்க அவரிடம் எல்லை மீற தொடங்குகிறார் சுரேஷ். இதில் கடுப்பான மதிய அவரை பிடித்து தள்ளிவிட சரியாக மண்டை கட்டில் மீது மோதி அவருக்கு அடிபட்டு விடுகிறது. ஐயோ அம்மா என அவர் அலறி துடிக்கிறார். சும்மா இருந்த பையனை அடி வாங்க வச்சிட்டியே மாமா!
