அடேய் சுரேஷ் நீ ஹீரோப்பா! என்ன வில்லன் ரேஞ்சுக்கு இறங்கிருக்கீங்க!

அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்
 
azhage azhagu

இன்றைய சமுதாயம் பல மாற்றங்களை சந்தித்தாலும் இன்னும் பல வீட்டில் பெண்களுக்கான அடிப்படை உரிமை கூட கிடைக்காமல் தான் இருக்கிறது. அதை மையமாக வைத்திருக்கும் அழகே அழகு சீரியல் ஒவ்வொரு பிரச்சனையையும் தொடர்ந்து காட்டிக்கொண்டு வருகிறது.

 அந்த வகையில் தன்னுடைய வீட்டில் தான் சொன்ன ரகசிய விஷயங்களை அப்பட்டமாக மாற்றிவிட்ட கணவரை ரேவதியும் அதேபோல் அவருடைய தாயிடம் மாட்டிவிட்டு அவர் செய்த விஷயத்தை தானும் செய்து அவருக்கு தக்க பதிலடி கொடுத்துவிட்டார்.

 இதில் கடுப்பான தங்கராஜ் ரேவதியிடம் சண்டை போட ரூமிற்குள் வர தூங்குவது போலவும் இப்பொழுது பேசினால் குழந்தைகள் விழித்துக் கொள்வார்கள் எனவும் பேசி அவரை சமாளித்து வெளியில் அனுப்பி விடுகிறார் ரேவதி.

 அதே நேரத்தில் வீட்டில் மதி வேலைக்கு அப்ளை செய்து கொண்டிருக்கும்போது அங்கு வந்து அமர்கிறார் சுரேஷ். தன்னுடைய மாமா சொன்னது போல இன்றைய மதியுடன் வாழ்க்கையை தொடங்கி விட முடிவெடுக்கிறார். அதன்படி தன்னுடைய வேலையையும் ஆரம்பிக்கிறார்.

 மதியிடம் சூசகமாக பேசி வேலையை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். நம் வாழ்க்கையை தொடங்கலாம் என சுரேஷ் அவரிடம் அத்துமீற தொடங்குகிறார். ஆனால் மதி இதற்கு உடன்படாமல் இப்பொழுது இதற்கு என்னால் அனுமதி தர முடியாது என மறுத்து விடுகிறார்.

 இதில் கடுப்பான சுரேஷ் நான் உன் புருஷன். என்னிடமே இப்படி நடந்து கொள்கிறாயா என சத்தம் போட்டு கத்த தொடங்க மதி அமைதியாக இருக்கும் படி கூறுகிறார். ஆனால் தொடர்ந்து சுரேஷ் கத்தி வீட்டில் இருப்பவர்களை எழுப்பி விடுகிறார்.

மாமியார், மலர், பாக்யராஜ் மற்றும் மாமனார் என அனைவரும் வந்து சுரேஷை அடக்க பார்க்க அவர் தொடர்ந்து அவதூறாக மதி பற்றி இவருடன் வாழ்க்கையை நான் நடத்தவில்லை எனவும் பேசிக்கொண்டே இருக்கிறார்.. நாளை இவர்கள் சண்டை இன்னும் வலுக்கும் என ப்ரோமோவின் மூலம் தெரிகிறது.

From Around the web