சுரேஷை வெளுத்துவிட்ட மதி… இது என்ன ஒரு மோசமான குடும்பம்!

அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்
 
azhage azhagu

கணவனே ஆனாலும் முடியாது என்றால் அது பெண்களின் தைரியமான முடிவாக இருக்கும் என்ற அடிப்படையில் அழகே அழகு சீரியலின் காட்சிகள் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

 அந்த வகையில் சுரேஷ் மதியுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து அவரை அவருடன் இணைய ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் மதி தனக்கு இதில் விருப்பமில்லை என அமைதியாக சொல்லியும் கேட்காமல் குடும்பத்தினரை அழைத்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார் சுரேஷ்.

 ஒரு கட்டத்தில் நாங்கள் பேருக்கு தான் கணவன் மனைவியாக இருக்கிறோம் என மற்றவர்கள் முன் விஷயத்தை போட்டு உடைக்கிறார். அது மட்டுமல்லாமல் மதியும் பதிலுக்கு பதில் பேச சுரேஷ் அவரை ஓங்கி அடிக்கிறார்.

 இதில் கடுப்பான மதி ஒரு நொடி கூட தாமதிக்காமல் சுரேஷ் கன்னத்தில் பளார் என வைக்கிறார். இதில் குடும்பமே அதிர்ச்சி அடைகிறது. ஆனால் சுரேஷ் அடித்ததை பெரிதாக பேசாமல் மதி அடித்ததற்கு அவர் மாமியார் மற்றும் மாமனார் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வருகின்றனர்.

மதியை மலரும், சுரேஷை பாக்யராஜும் தனியாக அழைத்துச் சென்று சமாதானம் செய்கின்றனர். காலையில் இந்த விஷயம் தங்கராஜ் மற்றும் ரேவதிக்கு தெரிந்து அவர்களும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். மீண்டும் மதியின் அப்பா அம்மாவை அழைத்து பஞ்சாயத்து பேச நிற்கின்றனர்.

 அங்கு மதி அடித்ததை மட்டும் சொல்ல மதி சுரேஷும் அடித்தார் எனக்கூறி விட அவர்கள் அதிர்ச்சியாக இருக்கின்றனர். பெண்களுக்கு கண்டிப்பாக மதி ஒரு இன்ஸ்பிரேஷனாக மாறலாம் என்றே கூறப்படுகிறது.

From Around the web