மதியை அடக்க வாய்ப்பு தேடும் தங்கராஜ்!... கூட்டு சேரும் ரேவதி, மலர்!

அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்
 
azhage azhagu

சுரேஷை அடித்த பிரச்சனையில் வீட்டில் இன்னும் சலசலப்பு இருக்கிறது. தற்போது இந்த வில்லன் டீம் என்ன செய்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 மாமியார் மற்றும் மாமனார் இருவரும் தங்கராஜிடம் இரவு என்ன நடந்தது என கூறிக் கொண்டிருக்கின்றனர்.  மலர் கல்யாணமும் பிரச்சினையில் தான் நடந்தது. ஆனால் அவள் இப்படி யாரிடமும் நடந்து கொண்டதில்லை.

ஆனால் இந்த மதி பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறாள். சொன்னதுக்கெல்லாம் ரூல்ஸ் பேசுறா என கறித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார் மாமியார். தங்கராஜ் சுரேஷிடம் வந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

என்னால் மதியுடன் இனிமேல் வாழ முடியாது. அவளை என்னால் அடக்கவே முடியல என பொரிந்து தள்ள இதெல்லாம் ஒரு ஆம்பள பேசுற பேச்சா, அவ பேசுற ரூல்ஸ் எல்லாம் நிறுத்த வழி பாரு. அவளை அடக்க என்ன செய்யலாம் என யோசி என இன்னொரு திட்டத்தை போட்டு கொடுத்து விட்டு செல்கிறார்.

மலர், மதி, ரேவதி மூவரும் தங்களுடைய குரூப்பில் பேசிக் கொண்டிருக்கின்றனர். ரேவதி நீ சுரேஷை அடித்தது தான் சரி. பொண்ணுனா ஈஸியா அடிச்சிடலாம் நினைக்கிறது தப்பு. இந்த விஷயத்தில் நீ என்ன முடிவு வேணா எடு.

இந்த வாழ்க்கையை பிடிக்கலைனு நீ முடிவெடுத்தாலும் நான் துணை நிற்பேன் என்கிறார். மலரும் என்ன டைவர்ஸ் வாங்கி கொடுத்துருவ போல என கலாய்த்து மூவரும் கஷ்டத்தை கூட சிரித்து பேசிக்கொள்கின்றனர். 

சுரேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வர பாக்கியராஜ் வருத்தப்பட்டு அழைத்து செல்கிறார். அவரை பார்த்த அப்பாவும் அழுதுக்கொண்டே உன் வாழ்க்கை இப்படி ஆச்சே என கண்ணீர் விடுகிறார். டேடி இதெல்லாம் திமிர்தனம். இவர் ஹீரோனு கூட மறந்துட்டு வில்லத்தனம்ல பண்ணிட்டு இருக்காரு என்பதுதான் ஃபேன்ஸ் மைண்ட் வாய்ஸ்!


 

From Around the web