மதியை காப்பாத்தும் மலர்… அய்யோ இந்த மாமியார் தொல்லை மோசமா இருக்கே!

மலரை போல மதியையும் வீட்டின் அடிமையாக மாத்த ப்ளான் போடும் மாமியாருக்கு அடுத்த ஆப்பு தயாராக போகுதுப்பா!
 
azhage azhagu

வேலையில்லாமல் இருக்கும் வீட்டில் இருக்கும் மதிக்கு பிரச்சனை கொடுக்க தயாராகிறார் மாமியார். அடுத்த அதிரடிக்கு தயாராக போகிறது இந்த குடும்பம் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். 

சுரேஷ் குடித்துவிட்டு வீட்டில் அலப்பறை கொடுத்துவிடுகிறார். மாமனார் அதை பார்த்துவிட்டு வருத்தப்பட்டு கொண்டு செல்கிறார். பின்னர் பாக்கியராஜ் அவரை சமாதானம் செய்து ஷோபாவில் படுக்க வைத்துவிட்டு செல்கிறார். 

காலையில் எழுந்து வரும் மாமியார் அதை பார்த்துவிட்டு இவன் என்ன இங்க படுத்துருக்கான் என்கிறார். மலர் தெரியலை. லேட்டா வந்து இருப்பான் எனக் கூறிவிடுகிறார். மதியும் கிளம்பி கிச்சனுக்கு வருகிறார். என்ன ஹெல்ப் செய்ய எனக் கேட்கிறார். 

மலர் அதெல்லாம் வேணாம். நீ ரன்னிங் போகலையா எனக் கேட்கிறார். இல்ல அப்புறம் போறேன் எனக் கூறிவிடுகிறார். மாமியார் அவளை வேலை செய்ய சொல்லு. நீயே ஓட தொரத்தி விடுற என்கிறார். பின்னர் மலர் அமைதியாகி விட மதியும் வேலை செய்கிறார். 

பின்னர் மலரை அழைக்கும் மாமியார் வீட்டை சுத்தம் செய்ய சொல்கிறார். அப்போ சாப்பாடு வேலை எனக் கேட்க மதியை சமைக்க சொல்கிறார். ஆனால் பெரிய அளவில் சமைக்க முடியாது என மதி கூற மாமியார். உனக்கு தெரியாது ஒன்னு இருக்கா என நக்கல் செய்ய மதியும் வேலையை செய்ய தொடங்குகிறார். 

மலர் வீட்டு வேலையை செய்துக்கொண்டு த்ரீ மெம்பர் க்ரூப்பில் இதை பேச தொடங்குகின்றனர். சும்மா இருக்க மதியை இந்த மாமியாரே அடுத்த பிரச்சனையை செய்ய வச்சிருவாங்க போலயே!

From Around the web