அடே இந்த மாமியார் சரியான டெரர் பீஸா இருக்கே! பாவம் மதி, மலர்!
ஒரு பிரச்சினையை ஊர் திரட்ட கொண்டு போகலாம் மொத்த குடும்பமே இந்த மாமியாரை திட்டிக் கொண்டிருக்கும் நிலையில் கூட அவர் அதை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மாமனார் உள்ளாடையை மதியை துவைக்க சொல்ல அவர் கடுப்பாக திட்டி விட்டு செல்கிறார். இதை பிரச்சனை செய்யலாம் என மகன்களிடம் சொல்ல அவர்களோ எங்க வேலையை நாங்கள் சிந்திக்கிற மாதிரி இதை அப்பா தான் செய்ய வேண்டும் எனக் கூறி விடுகின்றனர்.
இந்நிலையில் கணவரிடம் இந்த விஷயத்தை சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார் மாமியார். ஆனால் அவர் இதை பேச வேண்டிய இடம் டைனிங் டேபிள் இல்லை. மதி தொவைக்கலனா என்ன இனிமே நீ அதை துவைத்து என்கிறார்.
இதில் கடுப்பாகும் மாமியார் எல்லோரும் அவருக்கு எதிராக பேச ரேவதியிடம் இந்த பிரச்சினையை கொண்டு செல்கிறார். அவர் பொறுமையாக கேட்டு விட்டு விஷயத்தை தெரிந்தவுடன் அம்மாவை போட்டு திட்டிக் கொண்டிருக்கிறார்.
பின்னர் மூவர் அணி சேர்ந்து இந்த விஷயம் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இதில் மாமியார் கவலையாக வாசலில் உட்கார்ந்து இருக்க அவரை சமாதானம் செய்து வீட்டிற்குள் அழைத்து வர பேசிக் கொண்டிருக்கிறார் மலர்.
பின்னர் மாமனார் தன்னுடைய உடல் நல பிரச்சினைக்காக டெஸ்ட் எடுக்க வேண்டும் என பாக்கியராஜிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரும் விரைவில் செய்வதாக கூற மாமியார் மீண்டும் பயத்தில் இருப்பதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.
