மதியின் அதிரடியால் கடுப்பில் சுரேஷ்… மலர் செஞ்ச சம்பவம்!

விஜய் தொலைக்காட்சியின் அழகே அழகு சீரியலில் இன்று நடக்கும் எபிசோட் தொகுப்புகள்
 
azhage azhagu

அடக்குமுறை உள்ள குடும்பத்தில் புது மருமகளாக வந்திருக்கும் மதியின் அதிரடியாக சென்று கொண்டிருக்கும் அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.

சுரேஷ் மண்டையில் அடிபட்டு ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்க தங்கராஜ் அவரை கடுப்பில் திட்டிக் கொண்டு இருக்கிறார். நான் ஒன்னுமே செய்யவில்லை என சுரேஷ் நடந்த விஷயங்களை மறைத்தும் மழுப்பிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில்  பாக்கியராஜ் கால் செய்து தலையில் அடிபட்டிருக்கும் விஷயம் குறித்து விசாரிக்கிறார். அவரும் எதுவும் இல்லை என சொல்லி சமாளித்துவிட்டு போனை வைத்துவிட தங்கராஜ் என்ன ஆச்சு என சுரேஷிடம் கேட்கிறார்.

திடீரென அண்ணன் கால் செய்து அடிபட்டிருக்கும் விஷயம் குறித்து கேட்டதாக சுரேஷ் சொல்ல யார் சொல்லி இருப்பா என சந்தேகம் வருகிறது. தங்கராஜ் ரேவதியின் வேலையாக தான் இருக்கும் என கணித்து அவரை அழைக்கிறார்.

சுரேஷிடம் இப்போ பாரு உங்க அக்கா வந்து எதுவும் தெரியாத போல பேசுவார் என சொல்ல ரேவதியும் அதேபோல பேசி விஷயத்தை சமாளித்து விடுகிறார். பின்னர் மதி கீழே வந்து சாப்பிட அமர ரேவதி அவருடன் சகஜமாக பேசுவதை அவர் ஆச்சரியமாக பார்க்கிறார்.

 மதி காலேஜ் கிளம்பி சென்றுவிட இந்த வேலையால்தான் அவருக்கு இந்த திமிர் இருப்பதாக தங்கராஜ் சுரேஷை ஏற்றி விடுகிறார். பின்னர் ரேவதி மலருக்கு கால் செய்து தங்கராஜ் கேட்ட விஷயம் குறித்து அவரிடம் சொல்கிறார்.

இதில் கடுப்பான மலர் பாக்கியராஜை அழைத்து கடுப்படிக்கிறார். பின்னர் மலர் மாமனார் மதி மற்றும் சுரேஷ் வீட்டிற்கு அழைத்து வர சொல்கிறார். பாக்கியராஜுடன் பொய் சொல்லிவிட்டு மலரும் அவருடன் ரேவதி வீட்டிற்கு கிளம்புகிறார்.

From Around the web