மதிக்கு அடுத்த பிரச்சனையை துவக்கிய தங்கராஜ்… அப்பு கன்பார்ம் தான்!
அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடில் பெரிய அளவில் பரபரப்பான ஒரு விஷயத்தை தங்கராஜ் செய்திருக்கிறார்.
பாக்கியராஜின் அப்பா மதி மற்றும் சுரேஷ் வீட்டிற்கு அழைத்து வர கூற பாக்யராஜ் மற்றும் மலர் இருவரும் கிளம்பி ரேவதி வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு சுரேஷுடன் ரேவதி பேசிக் கொண்டிருக்க நால்வரும் அமர்ந்து பிரச்சனை குறித்து பேசுகின்றனர்.
ஆனால் சுரேஷ் மதி நம்முடைய வீட்டிற்கு வர வேண்டாம் எனக் கூறுகிறார். ரேவதியும் மற்றும் மலர் இருவரும் அவரை கண்டித்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என வலுக்கட்டாயமாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் மதி தன்னுடைய கல்லூரியில் மாணவர்களிடம் படிக்க அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரைப் பார்க்க அவர் அம்மா வந்திருக்க இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். மதிப்பு கல்யாண வாழ்க்கை பிரச்சினையாக இருப்பது பற்றி அவர் கேட்க மதி பாத்துக்கலாம் என தைரியமாக பேசுகிறார்.
அதே வேளையில் மதியின் கல்லூரிக்கு வரும் தங்கராஜ் முதல்வரை சந்தித்து மதியின் வேலையை நிரந்தரமாக்க வேண்டாம் என அறிவுரை சொல்கிறார். ஆனால் முதல்வர் இதில் தான் எந்த முடிவும் எடுக்க முடியாது என்னால் முடிந்ததை செய்கிறேன் என கூறி விடுகிறார்.
சும்மா இருந்த மதியை இப்படி பிரச்சனையை தொடங்கி கடைசியில் இந்த குடும்பம் தான் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அடுத்த அடி தங்கராஜுக்கு தான் விழும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.
