தப்பா பேசும் மதி… குஷியில் சுரேஷ்… இதெல்லாம் நடக்குமா?

அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்
 
azhage azhagu

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொடரான அழகே அழகு சீரியலில் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு சம்பவம் தற்போது நடந்திருக்கிறது.

தங்கராஜ் தன்னுடைய வேலையை காட்டி மதியின் பிரமோஷனை கெடுக்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மதி மற்றும் சுரேஷை சேர்த்து வைக்க ரேவதியும் ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார்.

காலையில் வந்து பாக்யராஜ் மற்றும் மலர் இருவரும் அழைத்துச் சென்றதால் வீட்டிற்கு கிளம்ப முடிவெடுக்கிறார் சுரேஷ். வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டு மதியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார்.

 ரேவதியின் குழந்தைகள் மதி செல்வதை பார்த்து அழுது அடம் பிடிக்க அவர்களை சமாதானம் செய்துவிட்டு கிளம்புகிறார் மதி. ஆனால் தங்கராஜ் இது ரேவதியின் வேலையாக இருக்கும் என அவரை கலாய்த்து கொண்டிருக்கிறார்.

 பின்னர் மலர் வீட்டில் இருக்க அவரை பாராட்டுவது போல் மட்டம் தட்டிக் கொண்டிருக்கின்றனர் அவருடைய மாமனார் மற்றும் மாமியார் இருவரும். பின்னர் மதி மற்றும் சுரேஷ் இருவரும் வண்டியில் சென்று கொண்டிருக்கின்றனர்.

 ஒரு கட்டத்தில் மதி சுரேஷிடம் மன்னித்துவிடுமாறு கூறுகிறார். அதைக் கேட்ட சுரேஷ் உனக்கு சாரி சொல்லத் தெரியுமா என கேட்க உங்களை அடிக்க வேண்டும் என்று எனக்கு எந்த எண்ணமும் இல்லை. 

ஏதோ ஒரு தவறுதலில் இது நடந்து விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். மதிமலர் சேருவார்களா, சுரேஷுடன் காதல் பிறக்குமா என்பதுதான் அடுத்த கட்டமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

From Around the web