மதிக்கு பயந்து தங்கராஜ் அடித்த பல்டி! செம்ம சம்பவமா இருக்கே!!

அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்க போகும் எபிசோட் குறித்த தொகுப்புகள்
 
azhage azhagu

கணவன் அடித்தால் தப்பில்லை. மனைவி அடித்தது தான் தப்பு என ஒரு பஞ்சாயத்தை வைத்து சபையை கூட்டி இருக்கின்றது அழகே அழகு குடும்பம்.

தாம்பத்திய வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சுரேஷ் அதை மதியிடம் அமைதியாக பேசி புரிய வைக்காமல் அடாவடியாக பேசி பறிக்க பார்த்திருக்கிறார். அது நடக்காமல் போக திமிர்த்தனமாக குடும்பத்தில் முன் மதியை அடித்தார்.

ஆனால் அமைதியாக போக மதி சாதாரண பெண் இல்லையே. அதே வேகத்தில் சுரேஷிற்கும் அடி கொடுக்க தற்போது குடும்பம் பஞ்சாயத்தை கூட்டிவிட்டது. மதியின் பெற்றோரை அழைத்து வைத்து அவர்களை அசிங்கப்படுத்த நினைக்கின்றனர்.

ஆனால் மாப்பிள்ளையும் மகளை அடித்ததை தெரிந்து கொண்டவர்கள் மதிக்கு ஆதரவாக பேசுகின்றனர். தொடர்ந்து குடும்பத்தினர் பேசிக் கொண்டிருக்க தங்கராஜ் இந்த பிரச்சினையை இப்படியே விட்டால் எல்லோரும் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டும் என பயப்படுகிறார்.

இதனால் சுரேஷை மன்னிப்பு கேட்க சொல்லி மதியையும் மன்னிப்பு கேட்க சொல்லி விடுகிறார். பின்னர் பிரச்சினை இதோடு முடிந்ததாக எல்லோரும் கூறிவிட்டு அங்கிருந்து செல்ல சொல்கிறார். மதியின் பெற்றோர் அவர் வாழ்க்கையை நினைத்து கண்ணீர் விட தான் பார்த்துக் கொள்வதாக தைரியம் சொல்லி அனுப்பி வைக்கிறார் மதி. 

போன பிரச்சனைக்கு அடங்கி போக சொன்ன மலர் கூட இந்த முறை மதிக்காக நின்று பேசினார். இனிமேல் மூன்று பெண்களின் ஆட்டமும் செமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web