மதி, மலருக்காக களமிறங்கிய சுரேஷ், பாக்கியராஜ்… பல்ப் வாங்கிய மாமியார்!

அழகே அழகு சீரியலில் இன்று நடக்க போகும் எபிசோட்டின் தொகுப்புகள்
 
azhage azhagu

பரபரப்பாக இருந்த மதி வேலை இல்லாமல் வீட்டில் மாமியார் சொல்வதை செய்கிறார். ஆனால் இந்த மாமியார் ஒருபடி மேலேறி செய்ய சொல்லும் விஷயம் வீட்டில் மீண்டும் பிரச்சனையாக வெடிக்கிறது. 

சமைக்க சொன்ன கையோடு மதியை துணி துவைக்க வைக்கிறார் மாமியார். மதியும் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு பார்க்க மாமனாரின் உள்ளாடை இருப்பதால் அதிர்ச்சி அடைந்து இருந்தார். 

இரண்டு மருமகளும் கடுப்பில் இருக்கின்றனர். மகன்களை அழைத்து பிரச்சனை செய்ய திட்டமிட பாக்கியராஜை வர சொல்கிறார். ஆனால் மலர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிடுகிறார். பின்னர் நைட் வீட்டுக்கு வரும் பாக்கியராஜிடம் விஷயத்தை சொல்கிறார் மலர்

இரவில் எல்லாரும் சாப்பிட்டு கொண்டு பிரச்சனையை போட்டு உடைக்கிறார் மாமியார். மகன்கள் தனக்கு சாதகமாக சொல்வார்கள் என எதிர்பார்க்கிறார். ஆனால் அவர்கள் உள்ளாடைகளை நாங்க தான் துவைக்கிறோம். அப்பாவோடத அவர்தான் துவைக்கணும் என்கிறார். இதில் மாமியார் ஷாக்காகி விடுகிறார். 

சாப்பிடுற இடத்துல என்ன பேச்சு இதுனு மாமனாரும் வாயை அடைத்துவிடுகிறார். போட்ட திட்டம் கேன்சல் ஆக கடுப்பில் இருக்கிறார் மாமியார். முதன்முறையாக பாக்கியராஜ் தனக்கு சப்போர்ட் செய்ய மலர் சந்தோஷமாக இருக்கிறார். 

மதியிடம் சுரேஷ் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாமே எனக் கேட்கிறார். அப்போ உங்க அப்பா உள்ளாடையை நீங்க துவைக்கலாமே எனக் கேட்க அவரோடத நான் ஏன் துவைக்கணும் எனக் கடுப்பாகிறார். இப்படி தான் எனக்கும் இருக்கும் எனத் திட்டுகிறார் மதி. 

From Around the web