மலரிடம் கெஞ்சும் மதி… ஏம்மா இப்போதா சுயமரியாத தல தூக்குதா!
விஜய் தொலைக்காட்சியின் லேட்டஸ்ட் வைரல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது அழகே அழகு சீரியல். அதில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
மதி மற்றும் சுரேஷ் இருவரும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். சுரேஷ் அருகில் அமர்த்தி அவர் அம்மா பேசிக் கொண்டிருக்கும் போது தலையில் அடிபட்டதை கேட்டு பதறி துடிக்கிறார். ஆனால் சுரேஷ் உண்மையை சொல்லாமல் சமாளித்து விடுகிறார்.
பின்னர் மாமனார் மதி ஏதோ பெரிய குற்றத்தை செய்து விட்டது போல பெரு மனத்துடன் வீட்டிற்குள் விட்டது போல பேசுகிறார். மதியும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். மலர் இதையெல்லாம் கேட்டுவிட்டு அமைதியாக தன்னுடைய வேலையை செய்ய சென்று விடுகிறார்.
இப்படி மலர் போல மதி இருந்தால்தான் இந்த வீட்டிற்கு அழகு என அடிமைத்தனத்தை பெருமையாக பேசுகிறார். அதை வேளையில் மதி மலரிடம் தனி மன்னிக்குமாறு கெஞ்சி கொண்டிருக்கிறார். ஆனால் மலர் முகத்தை திருப்பிக் கொண்டு அவரிடம் பேசாமலே செல்கிறார்.
தொடர்ந்து பாக்கியராஜ் மலர் இந்த பிரச்சனையில் பட்ட வேதனையை மதியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் மதி தான் தவறுதலாக சொல்லிவிட்டேன். வேண்டும் என்றே செய்யவில்லை என்பதை சொல்லி கொண்டு இருக்கிறார்.
பின்னர் பாக்கியராஜ் மலரிடம் மதியை மன்னிக்க சொல்ல அவரோ என்னால் கோபத்தை உங்கள் வீட்டில் தான் காட்ட முடியவில்லை. மதியிடம் ஆவது காட்டிக்கொள்கிறேன். உடனே அவளிடம் சிரித்து பேச முடியாது என கறாராக கூறி விடுகிறார்.
பின்னர் பாக்கியராஜுடன் சண்டை போட்டுவிட்டு மலரும் தூங்கி விடுகிறார். தொடர்ந்து அடுத்த நாள் காலை மதி மற்றும் பாக்யராஜ் இருவரும் பேசிக்கொண்டிருக்க அங்கு வந்து மதி மீண்டும் மலரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.
