அடாவடி மாமியாரிடம் ஓவரா அடங்கும் மலர்… மாஸ் காட்டும் மதி!
Azhage Azhagu: விஜய் தொலைக்காட்சியின் புதிய எண்ட்ரி சீரியலாக அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
பாக்கியராஜ் ரோட்டில் தங்கராஜை பார்க்க அவரிடம் பேச செல்கிறார். முகம் கொடுக்காமல் தங்கராஜும் பேசிவிட்டு அனுப்புகிறார். அருகில் இருந்தவர் உங்க மச்சான் தானே எனக்கு ஒரு லோன் வேணும், அவரிடம் விசாரிச்சு சொல்லுங்க என்கிறார்.
அவன் வெறும் கேஷியர் தானே எனக் கூற அதெல்லாம் இல்ல அவர் லோன் டிபார்ட்மெண்ட்டில் மேனேஜர் எனக் கூற தங்கராஜ் அதிர்ச்சியுடன் யோசிக்கிறார். பின்னர் பேங்கில் கால் செய்து கேட்க அவர்களும் பாக்கியராஜ் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆகியதை கன்பார்ம் செய்கின்றனர்.
மதி ரூமில் இருக்க சுரேஷ் வேணும் என்றே அவரை வம்பு வளர்க்க துண்டை பெட்டில் போடுகிறார். அதில் கடுப்பான மதி அதை தூக்கி கீழே எறிந்துவிட இதெல்லாம் நீங்க ஏன் இங்க போடணும். அழுக்கு இருக்க வேண்டிய இடத்துக்கு தான இருக்கு என பேசுகிறார்.
உங்களுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. உங்க வேலையை நீங்க தான் பாக்கணும் என்கிறார். பின்னர் கிச்சனில் வேலை செய்துக்கொண்டு இருக்க மலரை அவர் மாமியர் கூப்பிடுகிறார். அவர் செல்ல பார்க்க மதி அவரை நிறுத்திவிடுகிறார்.
வேலை செஞ்சிட்டு இருக்கீங்க. இப்போ அவங்களுக்கு தேவைனா அவங்களே வரலாமே என்கிறார். சுரேஷ் இவங்க நல்லா அட்வைஸ் பண்ணுவாங்க. கேட்டா கேளுங்க. இல்ல உங்க இஷ்டம் என நக்கலாக பேசுகிறார்.
இன்னொரு முறையும் மலர் என அவர் கூப்பிட அதே நேரம் மாமனாரும் வேகமாக வந்து கத்துகிறார். அவ கூப்ட்டுக்கிட்டே இருக்கா? நீ என்ன நின்னுட்டு இருக்க. உனக்கு இப்போலாம் திமிரா போச்சு. சேர கூடாதவங்களோட சேராத என்கிறார்.
மலர் அவர் மாமியாரை போய் பார்க்க அவர் என்ன கூப்பிட்டா வர மாட்டீயா எனக் கூறி அந்த தண்ணியை எடுத்துக் கொடு என்கிறார். அவரும் கொடுக்க குடித்துவிட்டு அமைதியாகி விடுகிறார். என்ன அத்தை கூப்பிட்டீங்க என மலர் மறுபடியும் கேட்கிறார்.
தண்ணிக்கு தான் கூப்பிட்டேன் என்கிறார். இதில் மலர் கடுப்பாகி அங்கிருந்து கிளம்புகிறார். சுரேஷ் இவ பேச்சை கேட்டு எதுக்கு திட்டு வாங்குறீங்க எனக் கூறிவிட்டு செல்கிறார். மதியும் மலருக்காக கவலை படுகிறார்.
பின்னர் தங்கராஜ் வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருக்க ரேவதியிடம் நைசாக பாக்கியராஜ் பற்றி விசாரிக்கிறார். அவரும் தெரியாதது போல காட்டிக்கொள்ள தங்கராஜ் பேங்கில் கேட்ட விஷயத்தை சொல்லி விடுகிறார்.
