மலருக்கு சரியான பாடம் புகட்டிய மதி… ஒரே பிரச்சனைல எல்லாம் க்ளோஸ்!
அழகே அழகு சீரியலில் ஒரு காப்பி டம்ளரால் பிரச்சனை வெடித்து கொண்டு இருக்கிறது. அதிலும் இன்றைய கலவரத்தில் மலருக்கும் சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார் மதி.
சுரேஷ் கிளாஸை வைக்காமல் போனதில் தொடங்கிய பிரச்சனை மதியை எல்லாரும் நிக்க வைத்து கேள்வி கேட்கின்றனர். அவர் அப்பா அம்மாவை அழைத்து வந்து திட்ட சொல்ல அவர்களும் மதியை அழைத்து சென்று புத்தி சொல்கின்றானர்.
ஆனால் அவர் பக்க நியாயத்தையே இருவரும் கேட்பதாக இல்லை. சொன்னதை சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர். அடுத்த ரவுண்டுக்கு தங்கராஜ் வந்து அவர் பங்குக்கு மதிக்கு ஓவராக அட்வைஸ் மழை பொழிய அவர் கடுப்பின் உச்சிக்கு சென்று விடுகிறார்.
ஒரு கட்டத்தில் அவரை மன்னிப்பு கேட்க சொல்ல மதி தன்னால் முடியாது என்கிறார். உங்க அப்பா அம்மா என்னமோ நீ திருந்திட்ட எனப் பேசுனாங்க எனக் கூற நான் எந்த தப்பும் செய்யலை என்கிறார். மலர் ஒரு மன்னிப்பு தானே கேட்டுடு எல்லாம் முடிஞ்சிடும் என்கிறார்.
இதில் கடுப்பான மதி இந்த மன்னிப்பு கேட்க ஆரம்பிச்சா கேட்டுக்கிட்டே இருக்கணும். நீங்க இப்படி ஆரம்பிச்சு தான் இங்க இருக்கீங்க. என்னால் சுயமரியாதை இழந்து வாழ முடியாது எனத் திட்டிவிடுகிறார். சுரேஷ் நீ மன்னிப்பு கேட்பீயா மாட்டீயா என சத்தம் போடுகிறார்.
ஆனால் மதி பிடிவாதமாக இருக்க அவரை வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறார். அவர் வாசலில் போய் உட்கார்ந்து விடுகிறார். சுரேஷ் எனக்கு ஆபீஸுக்கு டைம் ஆச்சு எனக் கூற மாமியார் உன் வேலைக்கு பிரச்சனை வேணாம் கிளம்பு என்கிறார்.
இந்த அம்மாக்கு நெஞ்சு வலினு மகனுக்கே மறந்துடுச்சோ? டாக்ஸிக்ல வொர்ஸ்ட்டு இவங்க தான் போல என ரசிகர்கள் கடிச்சு வச்சிக்கொண்டு இருக்கின்றனர். மதி ஆட்டம் இனிமேல் சரவெடியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
