வீட்டை விட்டு வெளியேறிய மதி… அடேய் முட்டாள்ஸ் இனிமே தான் சம்பவம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருக்கும் லேட்டஸ்ட் சீரியலான அழகே அழகு சீரியலில் இந்த வாரத்தின் முதல் எபிசோட்டே பெரிய அளவில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
மதி வாசலில் இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. எல்லாருமே மதியின் செயலில் கடுப்பில் இருக்கின்றனர். தங்கராஜுக்கு போன் செய்யும் மாமனார் மதி வாசலில் இருந்து அசிங்கப்படுத்துவதை சொல்லி விடுகிறார்.
அருகில் இருந்து ரேவதி இதை கடுப்புடன் கேட்கிறார். பின்னர் அவர் அம்மாவுக்கு கால் செய்து என்னாச்சு என மதி குறித்து அக்கறையாக விசாரிக்க ஆனாலும் மாமியார் திமிராகவே பேசிவிட்டு அவர் பதிலை கேட்காமல் கட் செய்து விடுகிறார்.
வீட்டில் எல்லாருமே மதி இன்னும் இருப்பதை கேட்டு கடுப்பிலே இருக்கின்றனர். தங்கராஜ் மதியின் அப்பாவுக்கு கால் செய்து நீங்களாம் பொண்ணா பெத்து வச்சிருக்கீங்க. வந்து மன்னிப்பு கேட்டு கூப்ட்டு போங்க என திட்டிவிடுகிறார்.
இதில் மதியின் குடும்பம் கவலையாக நிற்கின்றனர். பின்னர் சுரேஷ் வந்து மதியை கடுப்படிக்கிறார். அவரும் ஹாலுக்கு சென்று விடுகிறார். சரியாக மதியின் அப்பா வர அவரை வீட்டுக்குள் அழைத்து மோசமாக திட்டிக்கொண்டு இருக்கின்றனர்.
பின்னர் மதியை கூப்டு போக சொல்லிவிட மலர் பாக்கியராஜ் கூட அமைதியாக இருக்கிறார்கள். மதி அப்பாவும் அவரை வீட்டுக்கு அழைக்க சென்றுவிடுகிறார். மாமியார் செஞ்ச ஒரு சம்பவம் இவ்ளோ பிரச்சனைக்கு காரணமாச்சே!
