மதியால் கடும் கோபத்தில் மலர்… இனிமே இவங்க சண்டை தான் போலயே!
லேட்டஸ்ட் சீரியலாக விஜய் தொலைக்காட்சிக்குள் வந்தாலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தொகுப்புகள்.
மதியை வீட்டுக்கு அழைத்து சென்று விடுகிறார் அவர் அப்பா. வீட்டில் அவர் நிலையை நினைத்து எல்லாரும் கவலையாக இருக்க மதியை சாப்பிட வைக்க சொல்லிவிட்டு கண்ணீர் விடுகிறார் அவர் அப்பா. மதி எதற்கும் ரியாக்ட் செய்யாமல் அமைதியாக இருக்கிறார்.
வீட்டில் சுரேஷ் இருக்க இன்னும் மாமியார் வாய் மட்டும் ஓயவே இல்லை. ஒரு சின்ன பிரச்சனையை பெரிசாக்கிய இவரை இன்னமும் யாரும் ஒரு முறை கூட கேள்வி கேட்கலை. நெஞ்சு வலி கதைக்கு கூட மகன்கள் போட்ட சீன் முடியவில்லை.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு இடையே மதி சொன்ன விஷயம் குறித்தே புலம்பி கொண்டு இருக்கிறார் மலர். தனக்கு சுய மரியாதை இல்லை. நான் மன்னிப்பு என சொன்ன அடுத்த நொடியே மன்னிப்பு கேட்டதுக்கு எனக்கு இந்த வீடு என்ன தந்துச்சு என புலம்புகிறார்.
பாக்கியராஜ் அவருக்கு ஆறுதல் சொல்லி மதி கோபத்தில் பேசியதை கண்டுக்காதே என அமைதிப்படுத்த பார்க்கிறார். ஆனால் மலர் அவள் சொன்னது உண்மை தானே. நீங்களும் எனக்காக பேசியதே இல்லையே. தொடர்ந்து அவரை காய்ச்சி எடுத்துவிட்டு படுத்துவிடுகிறார்.
காலை வரை தூங்காமல் இருந்த பாக்கியராஜ் மலர் சமாதானம் செய்து விட்டாரா என ஏக்கமாக பார்க்க கடைசியில் அவரும் நான் நைட் இருந்த மாறியே தான் இருக்கேன். என்ன சமாதானம் செய்ய தான் நினைப்பீங்க. ஆனா எனக்காக பேச மாட்டீங்க என பேசிவிட்டு செல்கிறார்.
இதனால் அமைதியாக இருந்த மலர் இனி வேறு அவதாரம் எடுக்கலாம். ஒற்றுமையாக இருந்த மலர் மதிக்கு இடையே பெரிய விரிசல் விழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. என்ன ஆனாலும் பிரச்சனை இனிமேல் வெடிக்கும். சீரியலும் பரபரப்பாகும் என்றே பேசப்பட்டு வருகிறது.
