சும்மா இருந்த மதியை சுரண்டிவிட்டு மாட்டிக்கிட்ட சுரேஷ்… ஆட்டம் ஆரம்பம்!

ஒற்றுமையாக இருந்த மருமகள்கள் இடையே சரியாக பிரச்சனையை பற்ற வைத்த மாமியார்
 
azhage azhagu

விஜய் தொலைக்காட்சியின் அழகே அழகு சீரியல் இன்றைய எபிசோட்டில் மதியின் அடுத்த பிரச்சனைக்கு வழி வகுத்து கொடுத்து விட்டார் சுரேஷ். செமையா இருக்க போகுது ஆட்டம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

மதி வீட்டில் இருக்கிறார். அங்கு நடந்த பிரச்சனை குறித்து பேசிக்கொண்டு இருக்க மதியின் அம்மா கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி இருக்கலாமே நீ. ஒரு மன்னிப்பு தானே அதை கேட்டு இருந்தா இந்த பிரச்சனையே வந்து இருக்காதே எனச் சொல்லி மதி பிடிவாதமாக பேசுகிறார். 

நான் எந்த தப்புமே செய்யலை. தப்பு செய்யாம நான் எப்படி மன்னிப்பு கேட்க முடியும். ஆம்பளைக்கு வேலை செய்யாம இருந்ததுக்கு நான் தப்பாக முடியுமா எனச் சொல்லிவிட்டு ரூமுக்கு செல்கிறார். அப்போ சரியாக சுரேஷ் கால் செய்கிறார். 

என்ன போனை எடுக்க மாட்டேனு நினைச்சா எடுத்துட்ட. இப்போ தான் நிம்மதியா இருக்கேன். நீ இல்லாம நான் சந்தோஷமா இருக்கேன். நீ அங்கையே இரு. அதான் எனக்கு நல்லது என அவரை சரமாரியாக திட்டி விட மதி அவருக்கு டோஸ் விட்டு போனை கட் செய்கிறார். 

தங்கராஜ் மற்றும் சுரேஷ் இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். மதி இன்னும் கொஞ்ச நாள் அங்கையே இருக்கட்டும். அப்போ தான் திருந்துவா என்கிறார். அதே நேரத்தில் மதி திடீரென கிளம்பி செல்கிறார். வீட்டில் மாமியார் மாமனாரும் மதி குறித்து திட்டிக்கொண்டு இருக்கின்றனர். 

மலருக்கும் இனி அவளை நீ அமைதியாக நடத்தாதே. திமிரா நட என ஏற்றிவிடுகின்றனர். இனிமேல் மலரும் அப்படி தான் இருப்பா. மதி அந்த பேச்சு பேசுனாலே எனப் பேசிக்கொண்டு இருக்கின்றனர். மதி போலீஸ் ஸ்டேஷனில் சுரேஷ் முன் வந்து அமர்கிறார். 

என் கணவர் மீது கேஸ் கொடுக்கணும். என்னை வீட்டை விட்டு அனுப்பிட்டாரு எனக் கூற சுரேஷ் அதிர்ந்து நிற்கிறார். அடுத்த ஸ்கெட்சை சரியாக போட்டு விட்டார் மதி. இனிமே சுரேஷ் குடும்பம் என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்து பார்க்கலாம். 

From Around the web