மதியின் அடியே தனியா இருக்கே!... மொத்த குடும்பத்தையும் ஆட வைத்த சம்பவம்!

அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் தொகுப்புகள்
 
azhage azhagu

விஜய் தொலைக்காட்சியின் லேட்டஸ்ட் சீரியலாக இருக்கும் அழகே அழகு எபிசோட் நாளுக்கு நாள் வைரல் வெற்ற்யை பெற துவங்கி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோட் மாஸ் என்றே சொல்லலாம். 

சுரேஷ் சீண்டிவிட நேராக போலீஸ் ஸ்டேசனுக்கே புகார் கொடுப்பதற்காக வந்துவிடுகிறார். என் புருஷன் என்னை அடிக்க வந்தாரு. வீட்டை விட்டு துரத்துனாரு. போன் பண்ணி பிரச்சனை பண்ணாரு என அடுக்கடுக்கான புகார்களை வைக்க அங்கிருந்தவர்கள் அதிர்ந்து விடுகின்றனர். 

சுரேஷும் கோபத்தில் பேச அவருக்கு இணையாக மதியும் அவருடன் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் வர என்ன விஷயம் எனக் கேட்க கான்ஸ்டபிள்கள் போட்டு உடைத்து விடுகின்றனர். 

அவரும் சுரேஷை அழைத்து சத்தம் போடுகிறார். நீ திருந்தவே மாட்டியா? இந்த பொண்ணால தான் உனக்கு முன்னாடியே பிரச்சனை. அப்புறம் வேலை போச்சு. இப்போ கல்யாணம் பண்ணியும் இப்படி பண்ணிட்டு இருக்க என சரமாரியாக விளாசுகிறார். 

நீ ஒன்னு பண்ணு. உன்னோட அப்பா, அம்மா உடனே வரச்சொல்லு என்கிறார். வேணாம் சார் என சுரேஷ் சொல்ல அதெல்லாம் தெரியாது. வரணும். இங்க புகாரை எடுக்கலனு அவங்க மேல போனா நான் தான் அசிங்கப்படணும் எனத் திட்டுகிறார். 

சுரேஷ் தங்கராஜுக்கு கால் செய்ய அவரும் அதிர்ச்சியாகி விடுகிறார். பின்னர் ரேவதியிடமும் மதி பற்றி திட்டிவிட்டு செல்கிறார். தொடர்ந்து வீட்டுக்கு வந்து மாமனார் மற்றும் மாமியாரிடமும் விஷயத்தை சொல்ல நெஞ்சு வலி மாமியார் அடுத்த ஹார்ட் அட்டாக் டிராமாவை போடுகிறார். 

இவ ஏன் இப்படி செஞ்சிட்டு இருக்கா? நாங்க போலீஸ் ஸ்டேஷனே போனது இல்லையே என ஓவர் பெர்ஃபாமென்ஸ் போட தங்கராஜ் இருவரையும் அழைத்து செல்கிறார். மலர் மட்டும் அமைதியாக அவர்களை பார்த்து கொண்டு இருக்கிறார். மதியோட இந்த மூவ்வை குடும்பமே எதிர்பார்த்து இருக்காது போலயே!

From Around the web